www.rupeedesk.in

ரயிலை தவறவிட்ட நேரத்தில்... ஃபுட் கிங் சரத்பாபு

ரயிலை தவறவிட்ட நேரத்தில்... ஃபுட் கிங் சரத்பாபு






சொந்த பிஸினஸ் என்றபிறகு உணவு தொடர்பான தொழிலைச் செய்வதென்று முடிவெடுத்தேன். ஒவ்வொரு நிறுவனமாக அணுகி, அங்கு உணவகம் நடத்த அனுமதி கேட்டேன். எல்லா நிறுவனங்களும் இந்தத் தொழிலில் எனக்கு முன்அனுபவம் இருக்கா என்று கேட்டார்கள். கடைசியாக ஒரு நிறுவனத்திலிருந்து நாளன்றுக்கு 80 டீ, 20 காபிக்கு ஆர்டர் தந்தார்கள். என் உணவுத் தொழிலுக்கு பிள்ளையார் சுழி போட்டது இந்த 80 டீயும்,        20 காபியும்தான்.

ஒருமாதிரியாக பிஸினஸைத் தொடங்கி, அகமதாபாத்தில் அடுத்தடுத்து ஐந்து இடங்களில் சின்னச் சின்னதாக உணவகத்தையும் திறந்துவிட்டேன். வெளி நிறுவனங்களிலிருந்து பர்கர் அதுஇதுவென வாங்கி விற்றேன். ஆனால், லாபம் எதுவும் கிடைக்கவில்லை. மேற்கொண்டு இந்த தொழிலை எப்படி எடுத்துக் கொண்டு போவது?, லாபகரமாக ஆக்குவது எப்படி? என எனக்குள் பல குழப்பம்.

  அப்போது மும்பையில் ஐ.ஐ.எம். முன்னாள் மாணவர்கள் ஒரு கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டால் எனக்கு ஒரு பிஸினஸ் தெளிவு கிடைக்கும் என்று நினைத்து  மும்பை போனேன். கூட்டம் முடிந்து திரும்பும்போது ரயிலைத் தவறவிட்டுவிட்டேன். கையில் இருந்தது வெறும் இருநூறு ரூபாய்.

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்ஃபார்மில் படுத்துக்கிடந்த போதுதான் திடீரென ஒரு ஐடியா. தென்னிந்திய உணவுகளை வடஇந்தியாவில் விற்றால் என்ன? நம்மவர்கள் நிறையபேர் இங்கு இருக்கிறார்கள். தவிர, நல்ல தென்னிந்திய உணவை செய்துதரும் தொழிலில் போட்டியே இல்லை! அகமதாபாத்திற்குப் போனவுடன் அந்த யோசனையை செயல்படுத்தினேன். என் ஓட்டலைத் தேடி மக்கள் ஓடிவர ஆரம்பித்தார்கள்.