www.rupeedesk.in

பங்கு வர்த்தகம்: ஆஃப்லைன், ஆன்லைன்

பங்கு வர்த்தகம்: ஆஃப்லைன், ஆன்லைன்

பங்கு வர்த்தகத்துல ஆஃப்லைன், ஆன்லைன் அப்படின்னு ரெண்டு வசதி இருக்கு.

ஆஃப்லைன்ங்குறது புரோக்கர்கிட்ட நேர்லயோ, போன் மூலமாவோ ஷேர் வாங்கச் சொல்றது.

ஆன்லைன்ங்குறது, புரோக்கிங் கம்பெனி, நமக்குன்னு கொடுத்திருக்குற யூசர் ஐ.டி. பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, இன்டர்நெட் மூலமா நேரடியா பங்கு வர்த்தகம் பண்றது. பங்குச் சந்தையோட நெளிவு, சுளிவு தெரியாம, ஆன்லைன் ஷேர் டிரேடிங்கில்  இறங்குறது அவ்வளவா நல்லதில்லை.

இந்த ஆன்லைன் டிரேடிங் செய்யறதுக்கான அக்கவுன்டை பேங்க்ல ஆரம்பிச்சா, அது த்ரீ -இன் -ஒன் அக்கவுன்டா இருக்கும். அதாவது பேங்க் அக்கவுன்ட், டீமேட் அக்கவுன்ட், டிரேடிங் அக்கவுன்ட் மூணும் ஒரே இடத்துல கிடைக்கும். பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும், அதுக்கான பணப் பரிமாற்றம், நம்ம-ளோட பேங்க் கணக்குல கம்ப்யூட்டர் மூலமா தானா நடக்கும்.

இதே ஆன்லைன் அக்கவுன்டை ஷேர் புரோக்கிங் ஆபீஸ்ல ஆரம்பிச்சா, பேங்க் அக்கவுன்ட் தனியாவும், டீமேட் மற்றும் ஆன்லைன் டிரேடிங் கணக்கு தனியாவும் இருக்கும். ஆன்லைன் டிரேடிங் செய்ய இன்டர்நெட் கனக்ஷனோட இருக்கிற கம்ப்யூட்டர் அவசியம். அதுக்காக பிரவுசிங் சென்டர்ல போயி ஆன்லைன் டிரேடிங் செய்யக்கூடாது. ஏன்னா அது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை.

இப்போ பங்குகளை வாங்குற அளவுக்குத் தயாராகிட்டீங்களா..? அதாவது உபரியா இருக்கற சேமிப்பு பணத்தைத்தான் பங்குச் சந்தையில் போடுறதுனு முடிவு பண்ணி-யிருக்கீங்க... அதுக்கான டீமேட் கணக்கு, டிரேடிங் கணக்கு எல்லாம் ரெடியாகிடுச்சு... அப்படித்தானே..!