www.rupeedesk.in

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்படி ஆரம்பிப்பது?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்படி ஆரம்பிப்பது?


இப்போ எதுல முதலீடு பண்றதா இருந்தாலும் பான் கார்டு கண்டிப்பா வேணும். அதனால, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு தயாராகும் போதே பான் கார்டு வாங்கிக்கிடணும். ஓகே... அடுத்தக் கட்டமா, கே.ஒய்.சி. என்கிற உங்களின்  'வாடிக்கையாளரை அறிந்துக் கொள்ளுங்கள்" படிவத்தை ஏதாவது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளை மூலம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இதில் உங்கள் பெயர், முகவரி, பான் கார்ட் எண், வருமான விவரம் போன்றவற்றை நிரப்பி போட்டோ ஒட்டி கொடுக்க வேண்டும். கூடவே ரேஷன் கார்ட் மற்றும் பான் கார்ட் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டி வரும். இதை ஒரு முறை செய்தால் போதும்.

மேலே குறிப்பிட்டது, பொதுவானது. கிராமப்புற மக்களும் பயன்பட வேண்டும் என்பதற்காக ஓராண்டில் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறை அல்லது மொத்தமாக 50,000 ரூபாய் வரை செய்யப்படும் முதலீட்டுக்கு பான் கார்டு எண் கொடுக்கத் தேவையில்லை. இதற்கு கொடுக்கப்படும் கே.ஒய்.சி. படிவத்தில் புகைப்பட ஆதாரத்துக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், அரசு மற்றும் முன்னணி நிறுவனங்களின் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் கொடுத்தால் போதும் என செபி அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

செபி-யின் புதிய விதிமுறைப்படி, ஒருவர் தனித்தனியாக கே.ஒய்.சி. படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலம் வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளிலும் தலா 50,000 ரூபாய் வரை பான் கார்டு இல்லாமல் முதலீட்டை செய்ய முடியும்.