www.rupeedesk.in

உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் 15:15:15 ஃபார்முலா!

உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் 15:15:15 ஃபார்முலா!


ஒரு காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்தால், வங்கியின் மூத்த அதிகாரிகள்கூட வீட்டுக்கு வந்து நலம் விசாரித்து விட்டுப் போவார்கள். ஆனால், இன்று ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்தால்தான் அந்த மரியாதை நமக்கும் கிடைக்கும் என்கிற நிலை உருவாகிவிட்டது. எனவே, எல்லோரும் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி, அதாவது கோடீஸ்வரராக மாறுவது எப்படி என்பதை பற்றி விரிவாகவே பார்ப்போம்.

முதலில் ஒரு கோடி ரூபாய் என்கிற இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும்?

சேமிப்பு!

ஒரு கோடி ரூபாய் என்கிற இலக்கை அடைய வேண்டுமெனில், பணத்தைச் சேமிக்க வேண்டும் என்றுதான் நமக்குத் தெரியும். இது சரியான பதில்தான். ஆனால் எது உண்மையான சேமிப்பு...? உங்களுக்கு அடிப்படையான செலவுகள் போக மீதமுள்ள தொகைதான் உண்மையான சேமிப்பு. முதலில் சொன்ன சேமிப்புக்கும், இரண்டாவதாகச் சொன்ன உண்மையான சேமிப்புக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா...?

உதாரணமாக, நான்கு பேர் உள்ள குடும்பத்தின் மாத வருமானம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம். மாதச் செலவு ரூ.30,000 ஆகிறது. இரு சக்கர வாகனத்துக்கான ெட்ரோல் செலவு ரூ.2,500 ஆகிறது. இந்த 2,500 ரூபாய் செலவை 1,500 ரூபாயாகக் குறைத்து, மீதமுள்ள 1,000 ரூபாயைச் சேமிக்க முடிவு செய்கிறோம். ஆனால், இந்த சேமிப்பு அடுத்த சில மாதங்களுக்குக்கூட தொடர முடியாமல் போய்விடும். அதுதான் செலவின் வலிமை. அத்தியாவசியமான செலவைக் குறைக்கவே முடியாது. எனவே அத்தியாவசிய செலவு போக மீதமுள்ள தொகைதான் உண்மையான சேமிப்புத் தொகை. அதை கண்டிப்பாகச் சேமிக்க வேண்டும்.

எமர்ஜென்சி ஃபண்ட்!

சரி, சேமிக்கத் தொடங்கி விட்டோம். கையில் சில ஆயிரங்கள் சேர்ந்துவிட்டது. இந்த சமயத்தில் திடீரென ஒரு பெரிய செலவு வருகிறது. இதனால் ஏற்கெனவே சேமித்த பணமெல்லாம் கரைந்து போய்விடும் இல்லையா? இதற்குத்தான் முதலில் எமர்ஜென்சி ஃபண்டுக்கான பணத்தை நாம் சேர்த்து வைக்க வேண்டும். நம் வருமானத்தில் அடிப்படையான செலவுகள் போக 20,000 ரூபாய் இருக்கிறது எனில், அதில் 5,000 ரூபாய் எமர்ஜென்சி ஃபண்டாக எடுத்து வைத்துவிட வேண்டும். நம் சேமிப்பு இடையூறு இல்லாமல் தொடரவும், எதிர்பாராமல் வரும் நல்ல விஷயங்கள், விபத்துக்கள் போன்றவற்றுக்கு இந்த எமர்ஜென்சி ஃபண்டை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுதவிர, வேறு எதற்கும் இந்த பணத்தை பயன்படுத்தக்கூடாது,

இன்றைய தேதிக்கு உங்களிடம் 3 - 5 லட்சம் ரூபாய் வரை எமர்ஜென்சி ஃபண்டாக இருக்க வேண்டும். இதுவே 6 சதவிகித பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 12 வருடத்துக்குப்பின் அதாவது 2027-ல் எமர்ஜென்சி ஃபண்ட் 6 - 10 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். ஆக, 12 வருடத்துக்கு ஒருமுறை 6 சதவிகித பணவீக்கத்தில் உங்கள் செலவுகள் இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். ஒருவேளை உங்கள் எமர்ஜென்சி ஃபண்ட் பணவீக்கத்தைக் கணக்கிட்ட பின்னும் கூடுதலாக இருந்தால், உங்கள் ஒரு கோடி ரூபாய் என்கிற லட்சிய சேமிப்பிலேயே தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்.

கூட்டு வட்டி!

எமர்ஜென்சி ஃபண்ட் போகப் பாக்கி உள்ள 15,000 ரூபாயை எத்தனை மாதங்களாகச் சேர்த்தால், 1 கோடி ரூபாய் வரும் என்று கணக்குப்போட்டுப் பாருங்கள். இதை உண்டியலில் போட்டு வந்தால், ஏறக்குறைய 56 வருடம் நீங்கள் சேமிக்க வேண்டும். அதைவிட குறைந்த காலத்தில் உங்கள் இலக்கை நீங்கள் அடைய வேண்டும் எனில், அதை சரியான வகையில் முதலீடு செய்ய வேண்டும்.

சரியான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வதால் என்ன பயன்?



பல பயன்கள் உண்டு. அதில் முக்கியமானது, கூட்டு வட்டி. நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கிய நாளிலிருந்து, ஒரு கோடி ரூபாய் என்கிற இலக்கை அடையும் அந்தப் பொன்னான நாள் வரை உங்கள் பணம், பணத்தை ஈட்டும். அதுதான் கூட்டு வட்டி. உதாரணமாக, ஒருவர் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாயை, 10 சதவிகிதம் வருமானம் தரக்கூடிய முதலீட்டில் முதலீடு செய்கிறார் என்றால் 10 வருட முடிவில் அவருக்கு 20,48,450 ரூபாய் கிடைக்கும். இதையே அவர் முதலீடு செய்யாமல், வெறுமனே சேமித்து வைத்தால், 10 வருட முடிவில் வெறும் 12 லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். இப்போது புரிகிறதா கூட்டுவட்டியின் மகிமை?



எதில் முதலீடு?

சேமித்தால் மட்டும் போதாது. அதை முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் 1 கோடி ரூபாய் என்கிற இலக்கை நாம் அடைய முடியும். ஆனால், எதில் முதலீடு செய்வது, எவ்வளவு முதலீடு செய்வது, எத்தனை ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்வது?

இந்த கேள்விகளுக்கான சிதம்பர ரகசிய பதில்தான் 15 : 15 : 15 என்கிற சூப்பர் பார்முலா. அது என்ன 15 : 15 : 15..?

நீங்கள் சேமிக்க நினைக்கும் 15,000 ரூபாயை, எஸ்ஐபி முறையில் 15 வருடத்துக்குத் தொடர்ந்து முதலீடு செய்து, அதற்கு 15 சதவிகிதம் வருமானம் கிடைத்தால், உங்கள் கையில் 1,00,27,600 ரூபாய் கிடைக்கும். இந்த 1 கோடியில் நீங்கள் செய்த முதலீடு வெறும் 27 லட்சம் ரூபாய்தான். ஆனால், கூட்டுவட்டியின் மகிமையால் நான்கு மடங்கு பெருகி இருக்கிறது உங்கள் சேமிப்பு.

உங்கள் முதலீட்டைப் பணவீக்கத்தைவிடக் கூடுதலான வேகத்தில்  பெருக்கித் தரும் வல்லமை பங்குச் சந்தைக்கு உண்டு. பங்குச் சந்தை முதலீட்டில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்து தங்கள் இலக்கை அடையலாம். பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதில் முக்கியமான விஷயம், இப்படி நீங்கள் சேர்க்கும் 1 கோடி ரூபாய்க்கு ஒரு ரூபாய்கூட வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.



நீங்களும் கோடீஸ்வரர் ஆக..!

இன்றைக்கு 30 வயதிலேயே பலரும் 50,000 ரூபாயை சம்பாதிக்கிறார்கள். இதிலிருந்து 15,000 ரூபாயை எப்பாடுபட்டாவது எடுத்து முதலீடு செய்தால், உங்களது 45-வது வயதில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். இப்படி நீங்கள் சேர்த்த 1 கோடி ரூபாயை 8 சதவிகிதம் நிலையான வருமானம் தரக்கூடிய லிக்விட் ஃபண்டுகளிலோ அல்லது கடன் சார்ந்த ஃபண்டுகளிலோ முதலீடு செய்தால்கூட ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

30 வயதில் மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கும் நீங்கள், 15 ஆண்டுகள் கழித்து தோராயமாக 75,000 ரூபாய் சம்பளம் வாங்குவீர்கள். 30 வயதில் செய்த 30,000 ரூபாய் செலவு 15 வருடம் கழித்து, அதாவது உங்கள் 45-வது வயதில் 72,000 ரூபாயாக அதிகரித்திருக்கும். உங்கள் சம்பளத்தை வைத்தே உங்கள் செலவுகளை செய்து சமாளித்துவிடலாம். ஆனால், நீங்கள் சேர்த்து வைத்த 1 கோடி ரூபாய் உங்களுக்கு சம்பாதித்துத் தரும் பணமோ ஆண்டுக்கு சுமார் ரூ.8,00,000. இந்த வருமானத்தை வைத்தே உங்கள் குழந்தைகளின் கல்லூரிப் படிப்பை கல்விக் கடன் வாங்காமலே முடித்துவிடலாம்.

ஆக, கோடீஸ்வரராகும் எண்ணம்கொண்ட அனைவரும் இந்தச் சுலபமான ஃபார்முலாவைப் பின்பற்றித் தங்கள் இலக்கை எளிதாக அடைந்துவிட முடியும். நீங்களும் கோடீஸ்வரர் ஆகும் முயற்சியை இன்றே தொடங்கலாமே!

லைஃப் இன்ஷூரன்ஸ் வேகமாக க்ளெய்ம் பெற 5 வழிகள்

லைஃப் இன்ஷூரன்ஸ் ; வேகமாக க்ளெய்ம் பெற 5 வழிகள்...!


லைஃப் இன்ஷூரன்ஸ்  வேகமாக க்ளெய்ம் பெற 5 வழிகள்...!


பெரும்பாலானாவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வாங்கி வைத்திருப்பார்கள். அதாவது மணிபேக், எண்டோமென்ட், யூலிப் பாலிசிகளை முதலீட்டு நோக்கில் வாங்கி வைத்திருப்பார்கள். இந்த பாலிசிகள் முதிர்வு பெறும்போது க்ளைம் செய்துக் கொள்ளலாம். அதுவே டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி பாலிசிதாரர் மரணம் அடைந்த  பிறகுதான் க்ளைம் செய்ய முடியும். எனவே பாலிசிதாரரின் குடும்ப உறுப்பினர்கள் பாலிசியை க்ளெய்ம் செய்யும் போது சிக்கல் ஏற்படாத வகையில் சில முன் ஏற்பாடுகளை செய்து வைப்பது நல்லது.

1. கேஒய்சி அப்டேட்!
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில்  எடுக்கும் போது பாலிசிதாரரின் பெயர், முகவரி, ஆகியவற்றை கொடுத்திருப்போம். இதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருந்தால் அதை உடனாடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரிவிப்பது அவசியம். இதை கேஒய்சி படிவத்தில் மாற்றி வைப்பது நல்லது.


2. நாமினி அப்டேட்!
பாலிசியில் நாமினியாக நியமிக்கப்பட்டவர் பாலிசிதாரருக்கு முன்பே இறந்துவிட்டால், பாலிசியின் நாமினி இறந்துவிட்டார் என்பதை தெரிவித்து புதிய நாமினியை நியமிப்பது அவசியம்.

3. ஆவணங்களை சரியாக ஒப்படைத்தல்!
எண்டோமென்ட், மணிபேக் போன்ற பாலிசிகளை முதிர்வு தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது ஒரிஜினல் பாலிசி பத்திரம், வங்கி கணக்கு எண், வங்கி விவரம் ஆகியவற்றை முழுமையாக கொடுத்து க்ளெய்ம் செய்வது நல்லது. அதுவும் பாலிசி முடிந்த ஒரு மாதத்துக்குள் விண்ணப்பிப்பது நல்லது. ஒருவேளை பாலிசி பத்திரம் தொலைந்திருந்தால் அதை முன்கூட்டியே விண்ணப்பித்து நகல் பத்திரம் வாங்கி வைத்திருப்பது நல்லது.

4. குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது!
பாலிசி எடுத்தவுடன் பாலிசி குறித்த தகவல்களை குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது முக்கியம். அதாவது பாலிசியின்  பெயர்,  கவரேஜ் தொகை, பாலிசியின் கால அளவு, ஏஜென்ட் பெயர், அவரை தொடர்புக் கொள்வது எப்படி , பாலிசி எடுத்த நிறுவனம், அந்த நிறுவனத்தின் முகவரி, ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். அதேபோல அந்த தகவல்களை ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதிவு செய்து வைப்பதும் முக்கியம்.

5. தகவல்களை அப்டேட் செய்வது!
பாலிசிதாரர் இறந்துவிட்டால் அந்த தகவலை இன்ஷூரன்ஸ் எடுத்த நிறுவனத்துக்கு உடனடியாக தெரிவிப்பது அவசியம். இதை எந்தவிதமான தாமதமும் இல்லாமல் செய்ய வேண்டும். வாரிசு சான்றிதழை சமர்பிப்பது முக்கியம்.

காலாவதியான லைசென்ஸ் மோட்டர் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்குமா?

காலாவதியான லைசென்ஸ் மோட்டர் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்குமா?


 என் தந்தை மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அவர் சாலை விபத்தில் இறந்தபோது அவரது ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆகி இருந்தது. இந்த விபத்துக்கு என் தந்தை காரணம் அல்ல என்று சாட்சிகள் இருக்கிறது. இதற்கு க்ளெய்ம் கிடைக்குமா?


‘‘இந்த விபத்து வேறு ஒருவரால் தான் ஏற்பட்டது என்பதால், இதற்கு தேர்ட் பார்ட்டி லயபிலிட்டி க்ளெய்ம் (Third party liability claim) கிடைக்கும். மோட்டார் ஆக்ஸிடென்ட் க்ளெய்ம் ட்ரிபியூனல், இறந்தவரின் வாரிசுக்கு முதலில் க்ளெய்ம் தொகையை வழங்கிவிட்டு, வழங்கிய தொகையை விபத்து ஏற்படுத்திய வாகன உரிமையாளரிடமிருந்து வசூலித்துக் கொள்ளும் வகையில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடும். உங்கள் தந்தையின் ஒட்டுநர் உரிமம் காலாவதியாகி இருந்ததையும் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தக் கவனக் குறைவு அல்லது சட்டமீறலுக்காக க்ளெய்ம் தொகை குறைய வாய்ப்பிருக்கிறது.

என் ஆர் ஐ டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

என் ஆர் ஐ டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?


 தற்போது வெளிநாட்டில் வசிக்கும் எனக்கு 44 வயது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா வர உள்ளேன். எனக்கு திருமணமாகவில்லை. பெற்றோர்களும் இறந்துவிட்டார்கள். தற்போது நான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறேன். அதோடு ஒரு பென்ஷன் திட்டத்திலும் முதலீடு செய்து வருகிறேன். நான் டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டுமா?


‘‘நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியிலேயே உங்களை நம்பி யாரும் இல்லை என்பது புரிகிறது. அதேபோல், உங்கள் ஓய்வுக்கால பொருளாதார தேவைகளுக்கு பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்து வருகிறீர்கள். அதோடு உங்கள் மருத்துவத் தேவைகளுக்கு ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸும் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனவே, உங்களை நம்பி யாரும் இல்லை என்பதால் நீங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க தேவையில்லை. உங்கள் ஓய்வுக்கால தேவைகளுக்கு முதலீடு செய்துவரும் பென்ஷன் திட்டத்தோடு, கையில் கூடுதலாக இருக்கும் தொகையை நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இது இன்னும் உங்கள் ஓய்வுக்காலத்தை நிம்மதியோடு கழிக்க உதவும்

யூலிப் பாலிசியை சரண்டர் செய்ய முடியுமா?

யூலிப் பாலிசியை சரண்டர் செய்ய முடியுமா?

 யூலிப் பாலிசி ஒன்றில் ஆண்டு பிரீமியமாக ரூ.1 லட்சம் கட்டினேன். இந்த பாலிசியில் தொடர்ந்து முதலீடு செய்ய விருப்பமில்லை. 5 வருடம் முடிந்த பிறகு பிரீமியம் திரும்பக் கிடைக்குமா?


‘‘யூலிப் பாலிசிகளின் குறைந்த பட்ச 'லாக் இன் பீரியடு' ஐந்து வருடங்கள். அதற்கு முன்னால் அதிலிருந்து விலக விரும்பினால், ஐந்து வருடம் முடிந்தபிறகுதான் பணம் திரும்பக் கிடைக்கும். இது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
 ஐந்து வருடம் கழித்து, நீங்கள் வைத்திருக்கும் யூனிட்டுகளின் என்ஏவி மதிப்பு மட்டும்தான் கிடைக் கும். என்ஏவியின் மதிப்பு, சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது. அந்த வகையில் ஐந்து ஆண்டுகள் கழித்து, நீங்கள் கட்டிய தொகையைவிடக் குறைவான தொகைகூட என்ஏவி மதிப்பாக இருக்கும். அந்த வகையில், சந்தையின் சூழலை அனுசரித்துப் பணத்தை எடுப்பது லாபகரமாக அமையும்.’’

65 வயதில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?

65 வயதில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?

என் வயது 65. என் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கிறது. மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?

‘‘நீங்கள் மூத்த குடிமக்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க லாம். எல்லா பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் இந்த பாலிசியை விநியோகம் செய்கின்றன. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்து, பாலிசியின் நிபந்தனைகள் மாறுபடலாம். நீங்கள் செலுத்துகிற பிரீமியத்துக்குத் தகுந்த மாதிரி சிறந்த பாலிசியைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.”

நாமினி Vs வாரிசு: சொத்து யாருக்குப் போய்ச் சேரும்?

நாமினி Vs வாரிசு: சொத்து யாருக்குப் போய்ச் சேரும்?

                                   
 நண்பர் ஒருவர் பெருந்தொகை ஒன்றை வங்கியில் 'டெபாசிட்’ செய்திருந்தார். அந்த டெபாசிட்டிற்கு தனது இரண்டாவது மனைவியை நாமினியாக நியமித்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்துபோய்விட, அந்த பணம் யாருக்கு போய்ச்சேர வேண்டும் என்பதில் பிரச்னை வந்துவிட்டது. நாமினியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது மனைவிக்கு சேரவேண்டுமா, அல்லது முதல்மனைவிக்கும் அவர் மூலம் பிறந்த வாரிசுக்கும் போய்ச்சேர வேண்டுமா என்பதில் பயங்கர பிரச்னை! ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாத குறை!

இந்த பிரச்னை இப்படி என்றால் இன்னொரு நண்பரின் குடும்பத்துக்கு நிகழ்ந்தது வேறுமாதிரியானது. தனது குழந்தைகள் வயதில் மிகச் சிறியவர்களாக இருக்கிறார்களே என நினைத்து, தனது தூரத்து உறவினர் ஒருவரை நாமினியாக எல்லாவற்றுக்கும் நியமித்திருந்தார் அவர். தனக்கு ஏதாவது நேர்ந்தால் உறவினர் மூலமாக தனது முதலீடுகள் குழந்தைகளுக்கு கரெக்ட்டாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு.

ஆனால் நடந்தது வேறு! நண்பரின் மறைவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்காமல் தானே சொந்தம் கொண்டாடப் பார்த்தார் அந்த உறவினர்.

இப்படி பிரச்னைகள் எழுவதற்கு காரணம் நாமினி குறித்த தெளிவான பார்வைகள் இல்லாததுதான். ரத்த சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரை நாமினியாக நியமித்தாலோ, அல்லது யாரையுமே நாமினியாக நியமிக்காவிட்டாலோ, சம்பந்தப் பட்டவரின் வாரிசுகள் அந்த சொத்துக்களைப் பெறுவதில் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. நாமினிக்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமைகள் என்ன, கடமைகள் என்ன, வாரிசுகளுக்கு உள்ள உரிமைகள் என்ன என்பது பற்றி வழக்கறிஞர் என்.ரமேஷிடம் கேட்டோம்...

''ஒருவர் ரத்த சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரை நாமினியாக நியமித்துவிட்டு இயற்கை எய்திவிட்டார் என்றால், அவரது முதலீடுகள், சேமிப்புகள், பணிநலன்கள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? வாரிசுகளிடமா அல்லது நாமினியிடமா என்பது முக்கியமான கேள்வி.

வாரிசுகளிடமிருந்து எவ்வித ஆட்சேபனையும் இல்லாதபோது பலன்/முதலீடு நாமினியிடம் ஒப்படைக்கப் படும். ஒருவேளை வாரிசுகள் ஆட்சேபனை செய்யும் பட்சத்தில், நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவு பெற்று வருபவரிடமே ஒப்படைக்கப்படும்.

ஒருவர் நாமினியை நியமிக்காமலே மறைந்து விட்டால் பிரச்னைகள் எதுவும் இன்றி வாரிசுகளுக்கு அதாவது மனைவி, குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இவர்களில் யார் பொருத்த மானவர்களோ அவர்களுக்குப் போய்விடும். பொதுவாக, நாமினி என யாரையும் நியமிக்காதபோது வாரிசுச் சான்றிதழ் (legal heir certificate) அடிப்படையில் சொத்துக்களை/முதலீட்டைத் திருப்பி கொடுப்பார்கள். ஆனால், சில சூழ்நிலைகளில் நீதிமன்றத்தின் மூலம் வாரிசுச் சான்றிதழ் (succession certification) பெற்று அதன் மூலம்தான் பலனைப் பெற முடியும்.

வாரிசு இருக்கும்போது மூன்றாவது நபரை நாமினியாக நியமிக்கலாமா? என்கிற கேள்வியும் பலருக்கு எழக்கூடும். வாரிசுகள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் இந்த கேள்வி எழுவது நியாயமே. யாரை நாமினியாக நியமிக்க வேண்டும், யாரை நாமினியாக நியமிக்கக் கூடாது என எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், ரத்த உறவு முறை, பெற்றோர் அல்லது தாரத்தை (spous)  நாமினியாக நியமிப்பதுதான் நடைமுறை.

மூன்றாம் நபரை நாமினியாக நியமிக்கும்போது, சட்டரீதியான கேள்வியையும் சந்தேகங் களையும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே எழுப்பும். உதாரணமாக, ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து உறவினரல்லாத மூன்றாம் நபர் ஒருவரை நாமினியாக நியமிக்கும்போது, இந்த சந்தேகம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால் நாமினி மீது நிச்சயமாக சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சட்டரீதியாக இப்படி ஒரு சந்தேகம் எழும்பட்சத்தில் நாமினியிடம் பணத்தைக் கொடுக்காமல், வாரிசுகளிடமே ஒப்படைக்கப்படும்.

 சரி, ஏதோ ஒரு காரணத்திற்காக ரத்த சம்பந்தமில்லாத ஒருவரை நாமினியாக நியமித்து விட்டு மறைந்துவிடுகிறார் ஒருவர். அவர் விட்டுச் சென்ற சொத்துக்களை நாமினியாக இருப்பவர் அபகரிக்க நினைத்தால், அதை வாரிசுதாரர்கள் எப்படி தடுப்பது? இந்த பிரச்னையில் வாரிசுதாரர்களின் உரிமை என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.


சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட நாமினி, அதை வாரிசுகளிடம் கொடுக்க மறுத்தாலோ அல்லது அபகரித்தாலோ, நீதிமன்றத்தை நாடலாம். இறந்தவரின் வாரிசு என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதன் மூலம் இறந்தவரின் சொத்துக்களை, பலனை அல்லது பணத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்க நாமினிக்கு நீதிமன்றம் உத்தரவிடும்.

ரத்த சம்பந்தமில்லாத ஒருவர் என்னதான் நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தாலும், இறந்தவரின் சொத்தில் அவருக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சொத்துக்களையோ, பணத்தையோ அல்லது பலனையோ வாரிசுகளிடம் ஒப்படைக்கும் உரிமையும் கடமையும் மட்டுமே அவருக்கு உண்டு!

ஒருவருக்கு ஒரே ஒரு மகன் என்றால் வாரிசு யார் என்கிற பிரச்னை வராது. ஆனால், நான்கைந்து மகன்கள் இருந்தால், இதில் யாரை நாமினியாக நியமிப்பது என்கிற கேள்வியையும் பலர் கேட்கிறார்கள். ஒரே நபர் வாரிசாகவும், நாமினியாகவும், இருக்கும்போது பிரச்னை ஏதும் இல்லை. ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வாரிசுகளாக இருந்து, அதில் ஒருவர் மட்டும் நாமினியாக நியமிக்கப்படும்போது, குடும்பத்தின் மற்ற வாரிசுகள் ஆட்சேபனை செய்யவில்லை என்றால், நாமினியாக உள்ள வாரிசே சொத்துக்களை பெற்றுக் கொள்ள முடியும். மற்ற வாரிசுகள் ஆட்சேபனை செய்தால் (அதாவது, தங்களுக்கு பங்கு கிடைக்காது என்கிற நிலைமையில்) நீதிமன்றத்தை நாடலாம்.

ஒருவேளை நாமினியாக நியமிக்கப்பட்டவர் இறந்து விட்டாலோ அல்லது பித்துப் பிடித்திருந்தாலோ அது நாமினியாக யாரையும் நியமிக்கப்படாததற்கு சமம். நாமினி நியமிக்கப்படாத போது நேரடியாக வாரிசுகளிடம் சொத்துக்கள், பணம் அல்லது பலன்கள் கொடுக்கப்படும். அதேபோல திருமணத்துக்கு முன் செய்திருந்த டெபாசிட்டுகள் மற்றும் பாலிசிகளில் திருமணத்துக்கு பின் மனைவி மற்றும் குழந்தைகள் பெயரை நாமினியாகச் சேர்ப்பதும் குழப்பங்கள் வராமலிருக்க உதவும்.''

கஷ்டப்பட்டு சம்பாதிப்பது வாரிசுகள் அனுபவிக்கத்தான். அதற்கு சிக்கலில்லாத வகையில், நடந்து கொள்ளும் நேர்மையானவர்களையே நாமினியாக நியமனம் செய்யுங்கள்.

குறிப்பு: இங்கே சொத்து என குறிப்பிடப்படுவது அசையும் சொத்து மட்டுமே; அசையா சொத்து அல்ல.

உலகை மாற்றிய புதுமைகள்!

உலகை மாற்றிய புதுமைகள்!

அப்டேட் ஆக்கிய இணைய தளங்கள்!


கணினி கண்டுபிடிக்கப்பட்டபின் நாம் செய்கிற பல விஷயங்களை அந்த இயந்திரத்தைக் கொண்டு செய்ய முடியும் என்கிற நிலை உருவானது. அதுமட்டுமல்ல, நாம் எழுதி வைத்திருக்கும் பல விஷயங்களைப் பத்திரமாக வைத்துப் பாதுகாக்க கணினி மிகப் பெரிய அளவில் உதவியது. இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தினால், இந்தத் தகவல்கள் அழிந்துவிட்டால்..? இந்தக் கேள்விக்கு ஒரு தீர்வாக, நாம் எழுதி வைக்கும் அத்தனை விஷயங்களையும் இணையத்தில் வைத்துவிட்டால், யாராலும் அழிக்க முடியாது. வேண்டும் என்கிறபோது அந்தத் தகவலை நாம் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?

இந்த ஒரு நோக்கத்தில்தான் இணையங்களை உருவாக்கும் முயற்சிகள் 1980-களுக்குப் பிறகு அரங்கேறத் தொடங்கின. கணினிகள் பிரபலமான காலத்தில் டிம் பெர்னர்ஸ் மற்றும் லீ ஆகியோர் இணையதளங்களுக்கான ஆராய்ச்சியைத் துவங்கினர். தங்களது பெர்சனல் தகவல்களை எந்த இடத்தில் இருந்தபடியும் பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்கள் செய்த ஆராய்ச்சியின் நோக்கமாக இருந்தது.



பத்து வருடங்கள் முடிவில் அவர்கள் ஹைப்பர் டெக்ஸ்ட் டிரான்ஸ்ஃபர் புரோட்டோகால் (HTTP) மூலம் இணையதளங்களை உருவாக்கினர். 1990-ம் ஆண்டு முதல்முறையாக இது இலவசமாகப் பயன்பாட்டுக்கு வந்தது. இதன்மூலம் மக்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், ஒரு தகவல் உடனடியாகப் பதிவேற்றப்படவும், அதனைத் தெரிந்துகொள்ளவும் உதவியாக இருந்தது.

இதே காலகட்டத்தில் தேடுதல் தளங்களும் உருவாக்கப்பட்டன. இணையதளங்கள் தரும் செய்தியை ஓர் இணையதளம் தேடி தரும் அளவுக்கு இணையதளங்கள் வேகமாக வளர்ந்தன. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் செய்திகளையும், தகவல்களையும் பெறலாம் என்பதையும், நமக்குத் தேவைப்படும் செய்தியை தெரிந்துகொள்ளக் காத்திருக்கத் தேவையில்லை என்பதையும் இந்த இணையதளங்கள் சாத்தியப்படுத்தின.

இணையங்களின் வளர்ச்சியினால் உலகக் கோப்பை காலிறுதியில் இந்திய அணியின் வெற்றியைப் பார்க்க தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை. நினைத்தபோது தெரிந்துகொள்ளலாம். ஒபாமா என்ன பேசினார் என்பதைத் தெரிந்துகொள்ள செய்தித்தாள்களுக்காக காத்திருக்காமல், உடனுக்குடன் இணையத்தில்  தெரிந்துகொள்ளாலாம். இந்த வாய்ப்புகள் இணைய தளம் இல்லாமல் சாத்தியம் இல்லை. ஒருவரை அப்டேட்டாக மாற்றியதில் இந்த இணையதளங்கள் இன்றியமையாதவை!

இலக்குகளை எட்டிப்பிடிக்க 4 D X ரூல்ஸ்!

இலக்குகளை எட்டிப்பிடிக்க 4 D X ரூல்ஸ்!

புத்தகத்தின் பெயர்: The 4 Disciplines of Execution

ஆசிரியர்கள்: Jim Huling, Sean Covey, Chris Mcchesney

பதிப்பாளர்: Simon & Schuster

நன்கு செயல்படும் பல நிறுவனங்கள்  எதிர்காலத்தில் வெற்றிப் பெறமுடியாமல் போகக்  காரணம், எதிர்காலத் திட்டங்களைச் செயல்படுத்தாததே. ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும்போது எதிர்காலத் திட்டங்களுக்குத் தேவையான உளமார்ந்த ஈடுபாட்டை ஊழியர்களிடமிருந்து பெறுவது கடினம். ஏனென்றால், அன்றாட விஷயங்களைச் சரியாகவும், திறம்படவும் நடத்தி முடிக்கவுமே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும். இதற்கானத் தீர்வை கண்டுபிடிப்பதே இன்றைய நிறுவனத் தலைமையின் முன்னிருக்கும் சவால்.



இந்த விஷயத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வது தான் ‘தி ஃபோர் டிசிப்ளின்ஸ் ஆஃப் எக்ஸிக்யூஷன் (சுருக்கமாக, 4டிஎக்ஸ்)’ எனும் இந்தப் புத்தகம்.

இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு இந்தப் புத்தகம் சொல்லும் நான்குவித செயல்முறை ஒழுங்காற்றல்கள் (4 டிஎக்ஸ் - டிசிப்ளின்ஸ்) முழுமையான தீர்வு அளிக் கும் என்கிறார்கள் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள். முழுக்கவனத்தையும் அதிமுக்கிய விஷயங்களில் வைப்பதன் மூலமும், முதன்மை திட்டங்களைக் கண்டறிந்து அவற்றைச் செயலாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும், என்ன எதிர்பார்த் தோம், என்ன நடந்தது என்பதைச் சுலபத்தில் கண்டுகொள்ள ஏதுவான ஸ்கோர்போர்டுகளை நிறுவி, அதனைத் தொடர்ந்து கவனித்துவருவதன் மூலமும், எதிர்காலம் குறித்த திட்டத்தின் முக்கியத் துவம் மற்றும் அது செயலாக்கப்படுவதின் அவசியம் குறித்த பொறுப்பை நிறுவனத் தின் அனைவரும் உணரும் வகையில் இழைந்தோட செய்வதன் மூலமும் மட்டுமே நிறுவனத்தின் நிர்வாகிகள் பிரமாண்டமான வெற்றியைப் பெற முடியும் என்கிறார்கள் ஆசிரியர்கள். நிறுவனமோ, தனி நபரோ இந்த நான்கு வழிவகைகளைத் தங்கள் செயல்பாட்டில் நடைமுறைக்குக் கொண்டுவந்தால், அன்றாட சுனாமிக்கு நடுவேயும் எதிர்காலத்துக்கான வியூகங்களைச் செயல்படுத்த முடியும்  என்று உறுதி சொல்கின்றனர் ஆசிரியர்கள்.



செயல்முறை ஒழுங்கு - 1: உங்கள்  வியூகத்தின் அதிமுக்கிய விஷயத்தின் இலக்குகளின் மீது [வைல்ட்லி இம்பார்ட்டன்ட் கோல்ஸ் (WIG)] அதீத கவனம் செலுத்துங்கள்!

எதிர்காலத்துக்கான பல திட்டங்களிலும் கவனம் வைக்காமல், அவற்றில் எது மிக மிக முக்கியமோ, எது நம்மை நம்முடைய வியூகத்தையும்; இலக்கையும் [விக்] நிறைவேற்ற மிக உதவுமோ, அதில் மட்டுமே நம் முழுக் கவனத்தையும் வைக்க வேண்டும். அந்த மிக மிக முக்கியமான செயலை கண்டறிவதற்கு நான்கு விதிகளை ஆசிரியர்கள் சொல்கின்றனர்.

செயல்முறை ஒழுங்கு - 2: தொய்வு வருவதற்கு முன்னரே சரிசெய்தல்!

எதிர்காலத் திட்டங்கள் குறித்த செயல்பாட்டில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா இல்லையா என்று சொல்லும் விஷயங்கள், செயல்பாடுகள் முடிந்த பின்னால் அடைந்த வெற்றிக்குப் பின்னால் தெரியும் மற்றும் வெற்றியினால் விளையும் விஷயங்களேயாகும். நாம் இப்படிப்பட்ட விஷயத்துக்காக பாடுபடுகி றோம். வருமுன் தெரிந்துகொண்டு செயல்படுவதுதானே அழகு! வருமுன் அறிந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் நாம் சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடைய முடியும்.

செயல்முறை ஒழுங்கு - 3: ஸ்கோர் போர்டு ஒன்றை நிறுவுங்கள்!

ஒருநாள் கிரிக்கெட்டில் பரபரப்பாக ரன் குவிக்கும் மனநிலையில் விளையாட்டு வீரர்கள் விளையாடுகிற மாதிரியான  ஈடுபாடு நிறுவனத்திலும் வரவேண்டும் என்றால், எல்லோருக்கும் தெரியும் வகை யில் ஸ்கோர் போர்டு என்பது கட்டாயம் வைக்கப்பட வேண்டும். ஸ்கோர் போர்டு மட்டுமே அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எங்கே இருக்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தும். ஸ்கோர் போர்டே போட்டி மனப்பான்மையைக் கொண்டு வந்து, உளமார்ந்த ஈடுபாட்டுக்கு வழிவகைச் செய்யும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

செயல்முறை ஒழுங்கு - 4: ஒவ்வொரு வருக்கும் ஒரு பொறுப்பை ஒப்படைப்பது (அக்கவுன்டபிலிட்டி)!

மேலே சொன்ன மூன்று டிசிப்ளின் களும் ஓர் ஆடுகளத்தை அமைக்க உதவுவதே ஆகும். நான்காவதாக ஆசிரியர்கள் சொல்வது, ஒவ்வொரு வருக்கும் ஒரு பொறுப்பை ஒப்படைப் பது. ஒவ்வொரு குழுவும் வாரம் ஒருமுறை 20 - 30 நிமிட நேரம் சந்தித்து [விக் மீட்டிங்] எதிர்காலம் குறித்த வியூகங்களில் அதிமுக்கிய கவனம் செலுத்தி, செயல்பாட்டில் இருக்கும் நிறை, குறைகளை ஆராய வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

இந்தக் குழுவின் கூட்டத்தில் ஒவ்வொருவரும் கொடுக்கும் வாக்குறுதி கள் தனிமனிதன் என்ற அந்தஸ்தில் வழங்கப்படுபவையாகவே திகழ்கின்றன. இதனால் வேலை கனஜோராக நடக்க வாய்ப்புள்ளது என்றும், சிலர் தொடர்ந்து சொல்வதை நிறைவேற்றும் போது ஓர் ஆரோக்கியமான போட்டி உருவாகி நாளடைவில் அனைவருமே சொல்வதைச் செய்ய முயல்வார்கள் என்கின்றனர் ஆசிரியர்கள்.

இந்த 4 டிஎக்ஸ் முறையில் அதிகாரத் தின் மூலம் எதிர்காலத்துக்கான வேலைகள் முடிக்கப்படுவதில்லை. அனைவரின் இயல்பான மற்றும் ஆர்வத்துடனான ஈடுபாட்டுடன் இந்த வகை வேலைகள் நிறைவேற்றப்படு கின்றன என்கின்றனர் ஆசிரியர்கள்.

பாகம் - 2

இனி இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகத்துக்கு வருவோம். 4 டிஎக்ஸைக் கொண்டு ஒரு நிறுவனத்தில் அறிமுகம் செய்யும்போது எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம்? இந்த 4டிஎக்ஸை ஒரு நிறுவனத்தில் எப்படி நடைமுறைப் படுத்துவது? ஏற்கெனவே சொன்னதைப் போல் 4டிஎக்ஸ் என்பது ஒரு சட்டத்திட்டம் இல்லை. ஒரு செயல்முறை ஒழுங்காகும். இதனாலேயே இதனை நடைமுறைப்படுத்துவதற்குக் குழுவாரியாக மிகவும் நேர்த்தியான முயற்சி தேவைப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் கீழே சொல்லியுள்ள ஐந்துபடி நிலைகளைக் கடந்து சென்றே 4டிஎக்ஸை நடைமுறைப்படுத்துகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.



படிநிலை1: முக்கிய இலக்கை நிர்ணயித்தல் (விக்): நம் குழுவுடைய அதிமுக்கிய கவனம் தேவைப்படும் இலக்கு மற்றும் விஷயம் [விக்] என்பது எது என்பதில் தெளிவு பெறுவது. எதில் கவனம் வைத்தால் பெரிய அளவில் மாற்றங்கள் வரும் / பலன்கள் கிடைக்கும் என்பதைக் கண்டறிவதுதான் மிக மிக முக்கியமான முதல்படி நிலையாகும்.

படிநிலை 2: ஆரம்பித்தல்: 4டிஎக்ஸை அறிமுகம் செய்து ஆரம்பித்து வைக்கும் போது ஒவ்வொரு குழுவின் தலைவரும் நிறையவே பிரயத்தனப்பட வேண்டி இருக்கும். குழுவுக்குத் தேவையானது என்ன என்பதனை பரிபூரணமாக உணர்ந்து செயல்படவேண்டியிருக்கும்.

படிநிலை 3: ஏற்றுக்கொண்டு செயல் படுதல்: சுலபத்தில் குறைந்த காலத்தில் 4டிஎக்ஸை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திவிட முடியாது. நாள்பட முயற்சித்தால் மட்டுமே இதனை ஏற்றுக்கொள்வது என்பது சாத்தியம். எடுத்த எடுப்பிலேயே 4டிஎக்ஸ் எதிர்பார்த்த பலன்களைத் தருகிறதா என்று பார்க்காமல், 4டிஎக்ஸ் என்ற நடைமுறை குழுவில் செவ்வனே ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்றே பார்க்க வேண்டும். குழுவில் இருக்கும் எதிர்ப்பாளர்களும் நம்பும் வகையிலான பலன் குறித்த விளக்கங்களைச் சொல்லி, 4டிஎக்ஸ் நடைமுறைப்படுத்துதல் என்ற புதிய பாதையை நிறுவவேண்டியிருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

படிநிலை 4: மேம்படுத்துதல்: 4டிஎக்ஸை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தும் வேளையில் வியூகங்களை நோக்கி முன்னேற உதவும் வகையில் குழுவினர் தரும் புது யோசனைகள் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும். 4டிஎக்ஸை செயல்படுத்தும் குழுவினர் செய்யும் தொடர் முயற்சியையும், குழுவினர் பெற்ற வெற்றியையும் அவ்வப்போது கொண்டாடவும் மறக்கக்கூடாது.

படிநிலை 5: பழக்கமாக மாற்றுதல்: ஒரு குழுவுக்கு 4டிஎக்ஸ் என்பது நடைமுறையில் பழக்கமாக மாற வேண்டுமென்றால், ஓர் அதிமுக்கிய கவனம் தேவைப்படும் விஷயம் (விக்) நடத்திமுடிக்கப்பட்ட பின்னர் உடனடி யாக அடுத்த ‘விக்’ கண்டறிந்து அதனை நோக்கி செயல்படுத்தும் நடைமுறை களை (ஸ்கோர்போர்டு போன்றவற்றை) உடனுக்குடன் குழுவினர் மத்தியில் கொண்டுவந்துவிட வேண்டும். 4டிஎக்ஸ்ஸில் முக்கியமானது நிர்ண யிக்கபடும் இலக்குகள் அடையக்கூடிய வையாக இருக்க வேண்டும் என்பதுதான். நிறையக் குழுக்களின் தலைவர்கள் அடைய முடியாத இலக்குகளை நன்றாகத் தெரிந்தே நிர்ணயித்து விட்டு, இதில் 75% நடந்தாலே போதுமானது என்று செயல்பட ஆரம்பிப்பார்கள். இது மிகத் தவறான ஒன்று. 4டிஎக்ஸைப் பொறுத்தவரை, அதை அறிமுகப்படுத்தி நிறுவுவதில் காட்டப்படும் கருத்தும் திறமையுமே வெற்றிக்கு வழிவகுக்கும். அதற்கான வழிமுறைகளையும் இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளனர் ஆசிரியர்கள்.

பாகம் - 3

4 டிஎக்ஸை நிறுவுவதில் கடைப்பிடிக்க வேண்டியவை:

4டிஎக்ஸை நிறுவ முயலும்போது நிறுவனத்தின் செயல்பாட்டுக் கலாச்சாரத்தை மனதில்கொள்ள  வேண்டும். ஒரு நிறுவனத்தில் முற்றிலு மாக 4டிஎக்ஸ் அறிமுகப்படுத்தப் படும்போது இது ஒருநாள் ஈவென்ட் அல்ல. ஒரு தொடர் பிராசஸ் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோல், 4டிஎக்ஸ் என்பது ஒரு சிறந்த டீம் வொர்க்காக மட்டுமே பார்க்கப்படவும்; நிறுவப்படவும் வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு தலைவரைக் கொண்டே நிர்மாணிக்கப் பட வேண்டும்.

இந்த 4டிஎக்ஸ்ஸை வெற்றிகரமாக நிறுவ சிறந்த ஆறு வழிகளையும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். ஒரு நிறுவனத்தைப் போட்டிகளுக்கிடையே வெற்றிகரமாகச் செயல்படுத்த நினைப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது!

மொபைல் ஆப்ஸ்'ன் விஸ்வரூபம் (இன்போகிராபிக்ஸ்)

மொபைல் ஆப்ஸ்'ன் விஸ்வரூபம் (இன்போகிராபிக்ஸ்)



'நீரின்றி அமையாது உலகு' என்றான் வள்ளுவன். அதேப்போல் இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்ப 'ஆப்ஸ் இன்றி அமையாது உலகு' என்று மாற்றிக்கொள்ளும் அளவிற்கு மொபைல் அப்பிளிகேஷன் பயன்பாடும், அதன் தேவையும் அதிகரித்து வருகிறது.
 
இந்த நிலையில் சர்வதேச அளவில் மொபைல் போன் அப்பிளிகேஷன்கள் குறித்து flurry Analytics எனும் நிறுவனம் ஆய்வு செய்தது. அதில் மொபைல் அப்பிளிகேஷன்களை செலவிடும் கால அளவில் கடந்த 2015ல் 58 சதவிகிதமும், 2014ல் 76 சதவிகிதமும், 2013ல் 103 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக உலக அளவில் மொபைல் ஆப்ஸ் செலவிடும் கால அளவில்  திறன் வளர்ப்பு (Personalization)  சம்பந்தமான அப்பிளிகேஷன்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.




இன்ஷுரன்ஸ் பாலிசி... தவிர்க்க வேண்டிய தவறுகள்!

இன்ஷுரன்ஸ் பாலிசி... தவிர்க்க வேண்டிய தவறுகள்!


நம்மில் பெரும்பாலானவர்கள் லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் தவிர்த்துவருவது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே எடுத்திருப்பவர்கள் தங்கள் எதிர்கால பாதுகாப்புக்கு எந்த வகையிலும் உறுதி செய்யாத ஏதேதோ பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம், இன்ஷூரன்ஸ் குறித்து தெளிவான புரிதல் இல்லாததால் செய்யும் தவறுகளால்தான். இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது நாம் செய்யும் தவறுகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம்.

வரிச் சலுகை!

நம்மில் பலர் வரிச் சலுகைக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறோம். ஆனால், இன்ஷூரன்ஸ் என்பது எதிர்கால பாதுகாப்புக்குத்தானே தவிர, வரிச் சலுகை கிடைக்கும் என்பதற்காக அல்ல. இந்த மனநிலையை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் ஆலோசனை!

பல சமயங்களில் நமக்கு தேவையான இன்ஷூரன்ஸ் பாலிசியை நாமே முடிவு செய்து எடுக்காமல், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு எடுக்கிறோம். இப்படி சொல்கிறவர்கள் நிதி ஆலோசகர்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், இன்ஷூரன்ஸ் பற்றி எதுவுமே தெரியாத நண்பர்கள், உறவினர்கள் சொல்வதைக் கேட்டு பாலிசி எடுப்பது மிகவும் தவறு.

குறைந்த பிரீமியம்!

குறைந்த பிரீமியத்தில் கிடைக்கிறது என்பதற்காக எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியையும் எடுக்கத் தேவையில்லை. தேவை இருந்து, நல்ல பலன்களுடன் குறைந்த பிரீமியத்தில் பாலிசி கிடைத் தால், அதைத் தாராளமாக வாங்கலாம்.

தெரிந்துகொண்டு கையெழுத்திடுங்கள்!

பாலிசி எடுக்கும்போது படிவத்தை நாமே நிரப்பாமல் கையெழுத்து மட்டும் போட்டுத்தருவது. இதனால் தான் அந்த பாலிசி குறித்த எல்லா விவரங்களும் பாலிசிதாரருக்குத் தெரியாமல் போகிறது. அதேபோல, காப்பீட்டுப் பத்திரத்தில், சுயதகவல்கள், வாரிசுதாரர் மற்றும் விதிமுறைகளைச் சரிபார்த்து அதன்பிறகு கையெழுத்துப் போடுவதே நல்லது.

குறைந்த காப்பீடு; அதிக பிரீமியம்!

நம்மில் பலர் குறைந்த காப்பீட்டுக்கு அதிக பிரீமியத்தைக் கட்டுவது மாதிரி யான பாலிசியை வைத்திருக்கிறார்கள். காரணம், பாலிசி எடுக்கும்போது இந்த பாலிசியின் மூலம் எவ்வளவு இழப்பீடு கிடைக்கும், அதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளத் தவறி விடுகிறோம். குறைந்த பிரீமியத்தில், அதிக காப்பீடு தரும் டேர்ம் பாலிசி களைத் தேர்வு செய்வதே சரி.

முக்கிய தகவல்களை மறைப்பது!

இன்ஷூரன்ஸ் படிவத்தை நாமே பூர்த்தி செய்தாலும், முக்கியத் தகவல்கள், நோய்கள், முந்தைய மருத்துவ வரலாறு, வேறு காப்பீடுகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்காமல் விட்டுவிடுகிறோம் அல்லது மறைத்து விடுகிறோம். இது தவறு. நம்மை பற்றிய எந்த முக்கிய தகவலையும் நாம் மறைக்கவே கூடாது.

முக்கிய மாற்றங்கள்!

முகவரி மாற்றம், வாரிசுதாரர் மாற்றம், தொடர்புகொள்ளும் தகவல் மாற்றம் நிகழும்போது அதை உடனே காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரியப் படுத்த வேண்டும். ஆனால், இதைச் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள்.

இன்ஷூரன்ஸ் முதலீடு அல்ல!

சிலர் குழந்தைகள் பெயரில்   இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, அவர்களின் கல்விச் செலவுக்கும், திருமணச் செலவுக்கும் பயன்படும் என்று நினைக்கிறார்கள். இந்த மனநிலை முற்றிலும் தவறானது. குழந்தையின் கல்வி, திருமணத் தேவை களுக்கு தனியாக முதலீடு செய்ய வேண்டுமே தவிர, இன்ஷூரன்ஸ் பாலிசி  எடுக்கக் கூடாது.  முதலீட்டை யும், இன்ஷூரன்ஸையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

ரைடர்கள் முக்கியம்!

முக்கிய இன்ஷூரன்ஸ் பாலிசி களுக்கு ரைடர் என்று சொல்லப்படுகிற துணை பாலிசிகள் இருக்கும். இந்தத் துணை பாலிசிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே, பாலிசிதாரருக்கு கூடுதல் பயன் தரவேண்டும் என்பதினால்தான். ஆனால், இதற்கு பிரீமியம் தனியாகச் செலுத்த வேண்டுமே என்று நினைத்து, பலரும் இந்தத் துணை பாலிசிகளை எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள். இது பெரிய தவறு. பிரீமியம் கொஞ்சம் அதிகமாகக் கட்டினாலும், இழப்பீடு அதிகம் கிடைப்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.


எந்தெந்த நோய்களுக்கு கிடைக்கும்?

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டால், எல்லாவிதமான நோய்களுக்கும் க்ளைம் கிடைக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். எல்லா நோய்களுக்கும் இதில் க்ளைம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மெடிக்ளைம் பாலிசி எடுக்கும்போது அந்த பாலிசியில் எந்த நோய்களுக்கு எல்லாம் க்ளைம் கிடைக்கும், எந்தெந்த நோய்களுக்கு க்ளைம் கிடைக்காது என்பதையும் தெளிவாக கேட்டுத் தெரிந்துகொண்டால், பிற்பாடு ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.

மருத்துவமனை விவரங்களைக் கவனிக்க!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மருத்துவமனைப் பட்டியல் விவரம். இதைக் கவனிக்காமல் விடுவதால், அவசர நேரங்களில் அருகில் இருக்கும் மருத்துவமனைகளை விட்டுவிட்டு, எங்கோ இருக்கும் மருத்துவமனை களைத் தேர்வு செய்துவிடுவோம்.

அலுவலகத்தைச் சார்ந்திருக்க வேண்டாம்!

வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால், தனியாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதைத் தவிர்த்துவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. எதிர்பாராமல் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப் பட்டாலோ அல்லது நாமாக விலகினாலோ இன்ஷூரன்ஸ் இல்லாத நிலை ஏற்படும். அந்தசமயத்தில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அதற்கான செலவை நம் கையிலிருந்து கட்ட வேண்டிய நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்கு போதுமான கவரேஜ் உள்ள பாலிசிகளை  தனியாக  எடுத்துக்கொள்வது நலம்.

வேண்டும் காலந்தவறாமை!

சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்தாமல் விடுவதன் மூலம் சிலர் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை காலாவதியாக விட்டுவிடுகின்றனர். பிரீமியம் கட்டுவதில் காலந்தவறாமை மிக முக்கியம். சிலர் தாங்கள் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசிகள் பற்றி குடும்ப உறுப்பினர்களிடம் எதுவும் சொல்வ தில்லை. இதுவும் தவறு. எல்லா இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் குடும்ப உறுப்பினர்களிடம் அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டும். காப்பீட்டுப் பத்திரங்களைப் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும்.

மேற்சொன்ன இந்தத் தவறுகளை தவிர்த்தால்தான், இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்கும் முழுப் பலனையும் மக்கள் அனுபவிக்க முடியும்.

ஆன்லைன் ஷாப்பிங்... ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்!

ஆன்லைன் ஷாப்பிங்... ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்!

எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பி.கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணன்.

''ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே  செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள் இதில் உள்ளன. கடந்த மார்ச் மாதம்கூட  TimTara என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதளமும் அதன்பின்னர் மூடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.

கவர்ச்சி விளம்பரங்கள்!

கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடைசியில், யாராவது ஒருவருக்கு மட்டுமே அந்தப் பொருள் கிடைக்கும் என்று சொல்லிவிடும். ஆனால், ஏற்கெனவே கட்டிய பணத்தைத் திரும்பத் தரமாட்டோம், அதற்கு பதில் ஏதேனும் பொருள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லும். வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் இந்தப் பொருள், கடையில் விற்கும் விலையைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.



இரண்டு நிமிட நிபந்தனை!

இந்த ஏமாற்று வித்தையில் வேடிக்கையான விஷயம்,  வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்துமுடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகின்றன. அதாவது, பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக்குள்ளாவோம்.  ஏற்கெனவே பணம் கட்டிவிட்டோம்; எனவே, இரண்டு நிமிடத்தில் பொருளை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டிய பணம் போய்விடும் என்கிற அவசரத்தில்தான் நாம் செயல்படுவோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொருட்களை சரியாக புக் செய்ய முடியாமல் பணத்தை இழக்கிறார்கள் பலர்.

மறைமுக கட்டணங்கள்!

இன்னும் சில இணையதளங்கள் Free Trail, Half Price, பிணீறீயீ றிக்ஷீவீநீமீ போன்று பல ஆஃபர்களை தருகின்றன. இதிலும், பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறைமுக கட்டணங்கள் (Hidden Charges) என்ற பெயரில் அதிகமான பணத்தை உங்களிடமிருந்து கறந்துவிடுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைக் கேட்க மாட்டார்கள். இதேபோல, திடீரென இலவச போன், கம்ப்யூட்டர் என்று

மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.

ஷிப்பிங் கட்டண மோசடி!

உண்மையாக வாடிக்கையாளர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் தளங்கள், டிவி வாங்கினால்கூட அதை கொண்டுவந்து தருவதற்கு எந்தக் கட்டணத்தையும் கேட்காது.  அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொருளை கொண்டுவந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணையதளங்களை  நம்பக்கூடாது. இதில் இ-பே மட்டும் விதிவிலக்கு, காரணம், அந்தத் தளத்தில் பொருட்களை விற்பவர்கள் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விலை குறைவாக தருவதால் பொருட்களை கொண்டுவந்து சேர்க்க கட்டணம் கேட்கலாம்.

நோ ரிட்டர்ன், ப்ளீஸ்!

பொருட்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும்போது அளவு சரியாக இல்லை என்றால், அதைத் திரும்ப அனுப்பும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிவது அவசியம். ஆனால், ஆர்டர் செய்த பொருளைத் திரும்ப அனுப்பும் முன்பு நீங்கள் அதை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.



விதிமுறைகளில் மோசடி!

சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளை பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கியமான விதிமுறைகளை நம் கண்ணுக்கு தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறிவிட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெரிவித்தால், நாங்கள்தான் விதிமுறைகளை ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம் என்பார்கள். பெரும்பாலும் பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக்கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.

கூரியர் மோசடி!

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொருளானது கூரியர் மூலமாக நமக்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும்போது அந்தப் பொருளானது இல்லாமல்கூட இருக்கலாம். வீட்டுக்கு வந்த கூரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பியதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாமல்போனால், அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மூன்றாம் நபர் விற்பனையாளர்களைக்கொண்டு செயல்படுவதால் அவர்களாலும் ஏமாற்றப்படலாம், ஜாக்கிரதை.

வாரன்டி இருக்கிறதா?

பல இணையதளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன்தான் (Manufacturer Warranty)பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையைவிட மிகக் குறைவாக இருந்தால், உற்பத்தியாளர் வாரன்டி தராமல் மோசடி செய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற்கான பொறுப்பு அந்த ஆன்லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றிவிடும்.

உஷாரய்யா உஷாரு!

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

* பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது 200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது.

* பொருள் ஏலத்தில் (Auction, Bid) விற்கப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றே குறைவாக மட்டுமே இருக்கவேண்டும். மிக அதிக விலையுள்ள பொருளை, மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்றால் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

* நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார்ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்துப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வாறு விற்கின்றன. உதாரணம்,Nokia – NoikaS, Samsung Galaxy Note – Galaxy Note..

* பொருளை வாங்கும்போது, அதை ஏற்கெனவே வாங்கியவர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணையத்திலோ தேடிவிட்டு வாங்க வேண்டும்.


* ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவது நல்லது. அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும்.

* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள்.  இல்லை என்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிற மாதிரி (Cash On Delivery) வைத்துக்கொள்ளுங்கள்.

* முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொருள் வாங்குபவர்கள் அதுகுறித்து நன்கு பரிச்சயம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.

* ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங்களுக்கு கிடைக்கும் வரை பத்திரமாக வைத்திருக்கவும்."

பான் கார்டு எப்போது எல்லாம் தேவைப்படும்?

பான் கார்டு எப்போது எல்லாம் தேவைப்படும்?

50,000 ரூபாய்க்கு மேல் ஒரே நேரத்தில் வங்கியில் பணம் கட்டும் போது அல்லது எடுக்கும் போது உங்களின் பான் கார்டு எண்ணை குறிப்பிடுவது அவசியம்.


ஐந்து லட்ச ரூபாய்க்கு அதிகமாகச் சொத்து வாங்கும்போது அல்லது விற்கும்போது, பான் கார்டு எண்ணை  குறிப்பிட வேண்டும். இதேபோல் தொலைபேசி, செல்போன் இணைப்பு பெறும்போதும் பான் எண் கேட்கப்படுகிறது. மேலும் 50,000 ரூபாய்க்கு மேல் தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்யும்போது பான் எண் குறிப்பிடுவது அவசியம்.

பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய பான் கார்டு இருந்தால்தான் முடியும்.

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம். அவ்வாறு செய்திருந்தால் ஏதாவது ஒரு கார்டை வருமான வரித் துறை அலுவலகத்தில் சரண்டர் செய்துவிட வேண்டும். பொதுவாக, ஒருவர் இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

மேலும், இந்த கார்டுகளை கொண்டு மோசடி செய்தால், வருமான வரித் துறை விசாரணைக்கு இலக்காகி, அபராதம் விதிக்கப்படுவதோடு சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

வழங்கப்பட்ட பான் கார்டு பற்றிய விவரங்களை வருமான வரித் துறை அதன் வெப்சைட்டில் உடனுக்குடன் சேர்த்து விடுகிறது. அதிகார பூர்வமற்றவர்களிடம் போலியாகப் பெறப்படும் பான் கார்டு பற்றிய விவரம் இதில் இடம் பெறாது. அந்த வகையில், தனியார் ஏஜென்டுகள் மூலம் கார்டு வாங்கினால் அதனை வருமான வரித் துறையின் இணையதளத்தில் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம்.

ஏற்கெனவே, வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட சாதாரண பான் கார்டை தற்போதுள்ளது போல், லேமினேட் செய்யப்பட்ட கார்டாக மாற்ற வழியிருக்கிறது. இதற்கு பழைய கார்டுடன் அல்லது பழைய பான் எண்ணைக் குறிப்பிடும் ஏதாவது ஒரு ஆவணத்துடன், புதிதாக பான் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். இதற்கும் 96 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.

விவசாய வருமானத்தை மட்டும் கொண்டிருப்பவர்கள், வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்பதால், அவர்கள் பான் கார்டு வைத்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. 

பான் கார்டு - ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

பான் கார்டு - ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் மூலமும் விண்ணப்பித்து பான் கார்டை பெறலாம். இதற்கான படிவங்களை http://www.utitsl.co.in/pan/ , https://tin.tin.nsdl.com/pan/index.html  இணையதளங்களிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யும்போது, ஏதாவது விவரங்கள் தவறாக இடம் பெற்றுவிட்டால் அதனைச் சரிசெய்து மீண்டும் ‘சப்மிட்’ செய்ய வழியிருக்கிறது. விண்ணப்பத்தை ‘சப்மிட் செய்தபிறகு கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ‘அக்னாலெட்ஜ்மென்ட்’ பகுதி தோன்றும், அதில் பத்து இலக்க பான் எண் இடம் பெற்றிருக்கும்.

மேலும், அதில் கலர் புகைப்படம் ஒட்டுவதற்கு 3.5செ.மீக்கு 2.5 செ.மீ இடம் விடப்பட்டிருக்கும். இதனை பிரின்ட் அவுட் எடுத்து, போட்டோவை ஒட்டி, கையொப்பமிட்டு புகைப்படத்துடன் கூடிய சான்று  மற்றும் முகவரி ஆதாரம், பான் கார்டு விண்ணப்பக் கட்டணத்துக்கான டி.டி. அல்லது செக் ஆகியவற்றை National Securities Depository Limited, Trade World, A Wing, 4th Floor, Kamala Mills compound, Senapati Marg, Lower parel, Mumbai - 400 013. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும்போது கூடுதலாக சேவைக் கட்டணம் இருக்கிறது. 15 நாட்களுக்குள் தபால் அல்லது கூரியர் மூலம் பான் கார்டு வீட்டுக்கு வரும். இம்முறையில் விண்ணப்பிக்கும்போது விவரங்களை மிகவும் கவனமாகப் பூர்த்தி செய்வது மிக அவசியம். இல்லை என்றால் கார்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா?

இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா?

இரா.ரூபாவதி
‘‘எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எடுத்து அவரது இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளைச் செய்தேன். இதனால் எனக்கு சட்டப்படி ஏதாவது பிரச்னை வருமா?’’ . அவரது கேள்வியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொதுமேலாளர் இந்திரா பத்மினியிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

“வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. எனவே, ஒருவரின் கணக்கிலிருந்து வேறு ஒருவர் பணத்தை எடுப்பது சட்டப்படி தவறு. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வாசகரின் குடும்பத்தில் அவரைத் தவிர்த்து வேறு வாரிசு யாராவது இருந்து, அவர்கள் பிரச்னை செய்தால், வங்கியானது அவர் மீது நடவடிக்கை எடுக்கும். ஒருவேளை அவர்கள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இனிவரும் காலத்தில் யாரும் இப்படி செய்யமாட்டோம் என எல்லா வாரிசுகளும் நாமினிகளும் எழுதி வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமாட்டோம்.



பொதுவாக, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன், அவரது நாமினி மற்றும் வாரிசுதாரர்கள் அதை உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பது அவசியம். கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டதற்கான இறப்புச் சான்றிதழ், ஏடிஎம் கார்டு, பாஸ்புக், காசோலை புத்தகம் ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் எழுதி தரவேண்டும். அதாவது, வங்கிக் கணக்கில் நாமினி குறிப்பிடப்பட்டிருந்தால், அவருடைய பெயருக்கு மாற்றித்தருவார்கள்.

நாமினி பெயர் குறிப்பிடப்படாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்போது அதில் யாரிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அதற்கு மற்ற வாரிசுகள் ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதி கையெழுத்திட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் உரியவரிடத்தில் பணம் ஒப்படைக்கப் படும். மேலும், இந்த வாரிசுதாரர்களில் யாராவது நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பணத்தை எடுப்பாரெனில், வங்கி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.



இது முறைகேடாக பணத்தை கையாள்வதற்கு நிகரானது. என்றாலும், இதில் வங்கி நேரடியாக தலையிடாது. ஏனெனில், ஏடிஎம் கார்டு மற்றும் பின்நம்பர் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்.

இதுவே, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஜாயின்ட் அக்கவுன்ட் (கணவன் - மனைவி, அப்பா-மகன்) என்று வைத்திருந்தால், தனித்தனி ஏடிஎம் கார்டு இருக்கும். அந்தசமயத்தில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவரில் ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஏடிஎம் கார்டு மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இருவருக்கும் அந்தப் பணம் உரிமையானது. என்றாலும்,    கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்த செய்தியை வங்கிக்குத் தெரிவிப்பது முக்கியம்’’ என்றார்.

இதுபோன்ற சமயங்களில் ஏடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும்  சட்டப்படி யான செயல்களை மேற்கொள்வதே சிறப்பாக இருக்கும்.

ட்ரீம் இட், டூ இட், லிவ் இட் - கனவு நிஜமாக ஒன்பது வழிகள்!

  ட்ரீம் இட், டூ இட், லிவ் இட்  -  கனவு நிஜமாக ஒன்பது வழிகள்!

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது ரிச்சர்டு நியூட்டன் மற்றும் சிப்ரியன் அண்ட்ரியன் ரூசன் என்ற இருவர் இணைந்து எழுதிய ‘ட்ரீம் இட், டூ இட், லிவ் இட்’ என்ற உங்கள் கனவை நனவாக்க ஒன்பது வழிகள் என்னும் புத்தகத்தை. நம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளைச் செயலாக்க முனைந்தால்... என்ற வால்ட் டிஸ்னியின் வாசகத்துடன் ஆரம்பிக்கின்றது, இந்தப் புத்தகம்.

ஸ்டீவ் ஜாப்ஸ், மகாத்மா காந்தி, வால்ட் டிஸ்னி போன்றவர்களிடத்தில் இருக்கும் ஒற்றுமை என்ன என்று கேட்கும் ஆசிரியர்கள், அவர்கள் கண்ட கனவை நனவாக்க அயராது உழைத்தனர். அது மட்டுமா? அவர்கள் கனவு நனவான பின்னருமே அவர்கள் முயற்சியை நிறுத்தவில்லை. அவர் களுடைய கனவை மேலும் மேலும் செம்மைப்படுத்தி  பலனை அதிகப்படுத்தினர். அது மட்டுமல்ல, புதிய கனவுகள் பலவற்றையும் கண்டு அவற்றை நனவாக்கவும் முயன்றனர். நீங்கள்கூட இந்த மூவரையும்போல் திகழ வாய்ப்பு இருக்கின்றது. சந்தேகமே வேண்டாம், நிஜத்தில் இது சாத்தியமே என்கின்றனர் ஆசிரியர்கள்.

இந்தப் புத்தகத்தின் தனிச் சிறப்பு என்ன வென்றால்,  புத்தகம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி ஆசிரியர்கள் தரும் ஆலோசனைகளைக் கொண்டது. இரண்டாவது பகுதி ஆசிரியர்கள் சொன்ன ஆலோசனைகளைப் பின்பற்றி நிஜமாகவே தங்கள் கனவை நனவாக்கியவர்களின் செயல் மற்றும் நடைமுறைகள் குறித்த விளக்கங்கள். இந்த இரண்டு பகுதிகளும் கனவை நனவாக்க என்ன செய்யவேண்டும் என்பதைச் சுலபமான விதத்தில் தெளிவுபடுத்து கின்றன.



முதலில், கனவு ஒன்று வேண்டும். கனவுதான் நாம் எங்கே செல்ல வேண்டும் என்று சொல்லும். பின்னர் அங்கே செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். எப்படி சிந்திப்பது? முதலில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து சிந்தியுங்கள் என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள். பெரும்பான்மையான கனவை நனவாக்கியவர்கள் சிந்தித்ததினால் மட்டுமே அதைச் செய்தார்கள். ரொம்பவும் பெரிதாய் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், மிகச் சரியாய்ச் சிந்திக்கவேண்டும்.

சிந்திப்பதன் மூலம் கனவை அடைய என்னென்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிட வேண்டும். அடுத்தது அந்தப் பட்டியலில், இருப்பவற்றை எந்த வரிசையில் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அடுத்தபடியாக, எப்படிச் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். கடைசியாக, அவற்றைச் செய்ய நம்மிடம் என்னென்ன விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களையும் சிந்தித்தால் நம் கனவைச் சென்றடையத் தேவையான ரூட் மேப் தெளிவாகக் கிடைக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள். இந்த மேப்பை தயார் செய்வதில் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன வென்றால், நம்முடைய கனவை அடையும் செயல்திட்டத்தில் குழப்பமில்லாத சின்னச் சின்ன ஸ்டெப்கள் நமக்குக் கிடைக்கும்.

மேப்பைப் பற்றி நாம் சிந்தித்துத் தெரிந்துகொண்டபின், அடுத்தபடியாக இந்த மேப்பை நிஜமாகவே நாம் வரைய வேண்டும். இந்த மேப்பை வரைவதன் மூலம் இன்னமும் நாம் கனவுக்கான திட்டத்தினுள் தீவிரமாக நுழைய ஆரம்பிக்கின்றோம். வரைதல் என்றால், ஏதோ ரூட் மேப் என நினைத்துவிடா தீர்கள். கனவை அடையும் பாதை குறித்த படிநிலைகளை வரைவதைத்தான் ரூட் மேப் என்கின்றோம். இந்த மேப்பை வரைவது எப்படி என்பதைப் பல்வேறு படங்களுடனும் உதாரணங்களுடனும் தெளிவாக விளக்கியுள்ளனர் ஆசிரியர்கள்.

சிந்தித்தாகிவிட்டது. மேப்பும் போட்டாகிவிட்டது. அடுத்து..?  ஆசிரியர்கள் சொல்வது ஸ்டார்ட் என்பதைத் தான். திட்டம் தயாராகிவிட்டது, ஆரம்பிப்பது அப்படி என்ன  கடினமா என்பீர்கள். கடினமே என்பதுதான் ஆசிரியர்களின் பதில். ஏனென்றால், நம்மில் பெரும்பாலானோர் சிந்திக்காமலேயே ஒரு செயலை ஆரம்பித்து விடுகின்றோம் அல்லது ஒரேயடியாய் சிந்தித்து நேரத்தைச் செலவழித்துவிட்டு, செயலை ஆரம்பிக்காமலே இருந்துவிடுகின்றோம். இதனாலேயே பெரும்பாலானோருக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள். ஆரம்பிப்பது மிகவும் சுலபமான விஷயமாக இருந்தாலுமே நிஜத்தில் மிகமிகக் கடினமான விஷயம் இதுதான் என்கின்றார்கள் ஆசிரியர்கள்.

அடுத்து ஆசிரியர்கள் குறிப்பிடுவது, நாம் ஆரம்பித்த விஷயம் வொர்க்-அவுட் ஆகின்றதா என்று பார்க்க வேண்டும். இந்தச் செயலை செய்ததால் நாம் நம் கனவை நோக்கி முன்னேறு கின்றோமா, இல்லையா? வேகமாக நம்மை நம் கனவு நோக்கி இட்டுச்செல்லும் செயல் களைக் கண்டறிந்து அவற்றை அதிகமாகச் செய்தல். போகும் பாதை சரிதானா என்று சரிபார்த்துக்கொள்ளுதல் என மீண்டும் மீண்டும் நம்முடைய பாதையும் பயணத்தின் வேகமும் சரிதானா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும் என்கின்றார்கள் ஆசிரியர்கள்.

அடுத்தபடியாக ஆசிரியர்கள் சொல்வது, மனம்தளராத குணத்தை. பிரச்னையைச் சந்திக்காத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும், கனவை நனவாக்க முனையும்போது நாம் எக்கச்சக்கப் பிரச்னைகளைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இவற்றில் பல பிரச்னைகள் இயற்கையானதாகவும், பல பிரச்னைகள் செயற்கையானதாகவும் இருக்கும். இதில் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், நாம் சந்திக்கின்ற பல பிரச்னை களில் ஒருசில பிரச்னைகளே தீர்க்கமுடியாத வையாக இருக்கும் என்று சொல்லும் ஆசிரியர்கள், பிரச்னைகள் என்பது அனைவரும் வாழ்வில் எதிர்கொள்வதே என்பதை முதலில் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கின்றனர்.

பிரச்னையைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர்கள், நம்முடைய கனவை அடையும் பாதையில் எவையெல்லாம் தவறாகப் போகும் வாய்ப்பு இருக்கின்றது என்பதைப் பற்றிச் சிந்தித்தும், அதை எப்படித் தவிர்ப்பது என்பதை அறிந்தும் வாழப்பழக வேண்டும் என்கின்றனர். இந்த இரண்டு விஷயங்களையும் முழுமையாக உணர்ந்து கொண்டால் வெற்றிக்கான வாய்ப்பை நாம் எவ்வாறு அதிகரிக்கச்செய்வது என்பதனை சுலபத்தில் புரிந்துகொள்ளலாம்.

பிரச்னையைக் கண்டு கலங்காமல் இருந்து விடாமுயற்சி செய்தால் மட்டுமே கனவு நனவாகும் என்றும் சொல்கின்றனர் ஆசிரியர்கள்.
அடுத்தபடியாக ஆசிரியர்கள் சொல்வது, கனவை மனதில் வைத்து நனவாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, எப்போதுமே நம்முடைய பார்வையும் எண்ணமும் தொலைநோக்குடன் இருக்க வேண்டும். இந்தத் தொலைநோக்குப் பார்வையே நம்மை இடையில் வரும் இடையூறு களைச் சுலபத்தில் களையச்செய்வதாய் இருக்கும். தொலைநோக்குப் பார்வை இல்லாதபட்சத்தில் குறுகிய பார்வை இடையூறுகளைப் பெரிதாக்கிக் காண்பித்து, நம்மை அந்த இடத்திலேயே ஸ்தம்பிக்கச் செய்துவிடும் என்கின்றனர். இறுதியில் எல்லா பிரச்னைகளையும் சமாளித்து தடைகளை யெல்லாம் தாண்டி மன உறுதியுடன் செயல்பட் டால், நாம் நமது கனவை நனவாக்கிவிடுவோம்.

இதில் இருக்கும் சிக்கல் என்னவெனில்,  எப்போது நம்முடைய கனவு நனவாகின்றது என்பதை நாம் உணரமாட்டோம். இலக்கை அடைந்தபிறகும்கூட அதற்கான முயற்சியைத் தொடருவோம். இதைத் தவிர்க்க, நாம் இலக்கை அடைந்துவிட்டோம் என்ற உணர்வைப் பெற வேண்டும். அப்படி உணர்ந்து கொண்டால் அடுத்தக் கனவைக் காண ஆரம்பித்து, அதைச் செயலாக்கும் வழிகள் குறித்துச் சிந்திக்க ஆரம்பிப்போம் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

அவ்வப்போது கொஞ்சம் திரும்பியும் பார்க்க வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர்கள், திரும்பிப்பார்த்தால் மட்டுமே நமக்கு நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே போகின்றோம், இடையில் கற்ற பாடங்கள் என்னென்ன என்பது புரியும்.  இது புரிந்தால், அட நாம் இவ்வளவு சிறப்பாக இந்த விஷயங்களைச் செய்துவருகின் றோமே என்ற மனமகிழ்ச்சி வரும். அந்த மன மகிழ்ச்சியே நம்மை அடுத்தடுத்து, நாம் காணும் புதிய கனவுகளை நனவாக்குவதில் மிகவும் உதவியாக இருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

கனவு காணும் அனைவருமே படித்து நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களைச் சொல்லும் புத்தகம் இது.

மின்னணு பணமாற்றம் - எலெக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் டிரான்ஸ்ஃபர்

மின்னணு பணமாற்றம் - எலெக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் டிரான்ஸ்ஃபர்


காசோலைகள் போன்ற எந்த விதமான காதித ஆவணங்கள் இல்லாமல் வங்கிகளின் கணினிகள் மூலமாகவே பணமாற்றம் நடைபெறுவது எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர் எனப்படுகிறது.  இவை பணமாற்றத்தை விரைவாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகின்றன. எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர்களில் காசோலையோ வேறு விதமான காதிதமோ கிடையாது.

இதனால் தொகையை மாற்றியோ பெயரை மாற்றியோ பணம் கையாடல் செய்யக்கூடிய வாய்ப்புகள் குறைவு. மின்னணு முறையில் பணம் கொடுக்க வாங்க வேண்டிய செய்தி பரிமாறப் படுவதால் கடிதக் காசோலை போன்று  ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போய் சேர ஆகும் நேரம் மிச்சமாகிறது. காசோலை உபயோகிக்கும் போது பணம் பெறுபவர் காசோலையைத் தன்னுடைய வங்கியில் வைப்பு செய்து பணப் பா¢மாற்றத்தைத் துவக்க வேண்டும்.

ஆனால்எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர்களில் பணம் அனுப்புபவர் தன்னுடைய வங்கிக்குப் பணமாற்றத்துக்கான ஆணையைக் கொடுத்தால் அவ்வங்கி அவருடைய கணக்கிலிருந்து பணம் எடுத்து பணம் பெறுபவருடைய வங்கியின் கணக்கில் சேர்ப்பிக்கும். இது பணம் பெற வேண்டிய வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும். பணம் பெறுபவர் செய்ய வேண்டுவது ஒன்றுமே இல்லை.

என் ஈ எஃப் டி எனப்படும் டிரான்ஸ்ஃபர் முறை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ரூ. 2 லட்சம் வரையான பணமாற்றங்களுக்கு இம்முறையே பயன்படுகிறது. பணம் அனுப்புபவர் வங்கி சென்றோ ஆன்லைன் மூலமாகவோ வங்கிக்கு பணமாற்றத்துக்கான ஆணை கொடுக்கலாம். ஒரு நாளில் ஆறு அல்லது ஏழு முறை இதற்கான கிளியரிங் ரிசர்வ் வங்கியில் செயல்படுகிறது. பணமாற்றம் செய்பவரின் வங்கியின் கணக்கிலிருந்து பணம் பெறுபவா¢ன் வங்கியின் கணக்குக்கு பணமாற்றம் செய்யப்படுகிறது. கிளியரிங் முடிந்த உடன் பெற வேண்டியவான கணக்குக்கு பணம்  போய்ச்சேருகிறது. சில மணி நேரங்களில் பணம் போய்ச்சேரும்.

ஆர் டி ஜி எஸ் எனப்படும் டிரான்ஸ்ஃபர் முறை ரூ. 2 லட்சத்துக்கு மேலான பணமாற்றங்களுக்குப் பயன்படுகிறது. என் ஈ எஃப் டி போலவே இதிலும் பணம் அனுப்புபவர் வங்கி சென்றோ ஆன்லைன் மூலமாகவோ வங்கிக்கு பணமாற்றத்துக்கான ஆணை கொடுக்கலாம். ஆனால், வேறுபாடு என்னவென்றால் என் ஈ எஃப் டி போல் அல்லாமல் இம்முறையில் கிளியரிங் அவ்வப்பொழுது செயல்படுவதில்லை. பணம் அனுப்புபவரின் வங்கியின் கணக்கிலிருந்து பணம் பெறுபவரின் வங்கியின் கணக்குக்கு பணமாற்றம் ஒவ்வொரு டிரான்ஸ்ஃபருக்கும் ஒவ்வொரு முறை தனித்தனியாக செய்யப்படுகிறது. இதனால் கால தாமதம் இல்லாமல் உடனுக்குடன் பெற வேண்டியவரின்  கணக்குக்குப் பணம் போய்ச்சேருகிறது.

சில சந்தர்ப்பங்களில் நிறுவனங்கள் ஒரே சமயத்தில் பலருக்குப் பணம் அனுப்ப நேரிடலாம். சம்பளப் பட்டுவாடா, பங்குதாரர்களுக்கு லாபத்திலிருந்து டிவிடெண்ட் பட்டுவாடா போன்றவை செய்ய ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் பண மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.



இ சி எஸ் (கிரெடிட்) எனப்படும் எலெக்ட்ரானிக் கிளியாரிங் சர்வீஸ் முறையில் இதைச் செய்யலாம். நம்முடைய வங்கிக்குப் பணம் பெற வேண்டியவர்களின் கணக்கு எண், வங்கிக் கிளை எண், அனுப்ப வேண்டிய தொகை போன்றவற்றைப் பட்டியல் போட்டுக் கொடுத்து விட்டால் நம் வங்கி பணம் பெற வேண்டியவர்களின் வங்கிக்கு இந்த விவரங்களையும், மொத்தத் தொகையையும் அனுப்பி வைக்கிறது. சம்பந்தப்பட்ட வங்கிகள் பணம் பெற வேண்டியவர்கள் கணக்கில் வைப்பு செய்கின்றன.

சில சந்தர்ப்பங்களில் இதற்கு மாறாக பலர் ஒரே நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இ ஸி எஸ் (டெபிட்) முறையில் இதைச் செய்யலாம். நம்முடைய மாதாந்திர பில் தொகையைப் பொருத்து பில்லின் ஒரு உச்ச வரம்பை நாமே நிர்ணயிக்க வேண்டும்.

நம்முடைய வங்கிக்கு நம் கணக்கில் இந்த உச்சவரம்புத் தொகை வரை ஒவ்வொரு முறையும் நம்மைக் கேட்காமல் எடுக்க இசைவு அளிக்க வேண்டும். இந்த இசைவின் நகலை வங்கியின் ஒப்பத்தோடு தொலைபேசி, மின்சார வாரியம்  போன்ற கட்டணம் பெற வேண்டிய நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் இந்நிறுவனங்கள் மாதந்தோறும் நம்மைத் தொந்தரவு செய்யாமல் தாமே நம் வங்கிக்கு அந்த மாதம் செலுத்த வேண்டிய தொகையைத் தெரிவிப்பார்கள். நம் வங்கியும் தொகை நாம் அங்கீகரித்த வரம்புக்குள் இருந்தால் நம்முடைய மறு இசைவு தேவை இன்றி பணம் பெற வேண்டிய நிறுவனங்களின்  வங்கிகள் வழியாக அந்தத் தொகையைச் செலுத்தி விடும்.    

இம்முறையில் பில் கட்டணம் சில மாதங்கள் அதிகமாக இருந்தாலும் நம்முடைய கணக்கில் இருந்து எடுத்த பின்னரே தெரிய வருவது ஒரு குறைபாடு. எனினும் எடுக்கும் தொகைக்கு ஒரு வரம்பு உள்ளதாலும், நம்பிக்கைக்குய நிறுவனங்களுக்கே இது போன்ற இசைவு கொடுக்கப்படுவதாலும் பெரும் அளவில் தவறு நடக்க வாய்ப்பில்லை.

ஆன்லைனில் பொருள் வாங்குபவரா நீங்கள்? உஷார் தகவல்கள்

ஆன்லைனில் பொருள் வாங்குபவரா நீங்கள்? உஷார் தகவல்கள்...!


ஆன்லைனில் பொருள் வாங்குபவரா நீங்கள்? உஷார் தகவல்கள்...!

என்னால் தேடிச்சென்று கடை கடையாய் ஏறி இறங்கி பொருள்கல் வாங்க முடியாது, நான் ஆன்லைனில் தான் பொருள் வாங்குவேன் என்பவரா நீங்கள்? நீங்கள் பொருள் வாங்கும் போது என்னென்ன தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அதை எவ்வாறு எல்லாம் தவிர்க்கலாம் என்பது குறித்த ஐடியாக்கள் இதோ...

என்னென்ன தவறுகள் :

நீங்கள் வீட்டில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்பவராக இருந்தால் நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளம் நம்பகத் தன்மையானது தானா? என சரிபார்த்து வாங்குங்கள். இல்லையெனில் உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.

நீங்கள் ஏதாவது ப்ரௌசிங் சென்டரில் இருந்து ஆர்டர் செய்பவராக இருந்தால் அங்கு ஸ்கிரீன் கேப்சரிங் தொழில்நுட்பமோ அல்லது சில மென்பொருட்களை பயன்படுத்தியோ உங்கள் பாஸ்வேர்டு அல்லது கிரெடிட் கார்டு தகவல்கள் திருடப்படலாம். கூடியவரையில் நீங்கள் ஆர்டர் செய்ய ப்ரௌசிங் சென்டர்களை தவிர்ப்பது நல்லது.

சில சமயம் மொபைல் ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது அதன் விதிமுறைகளை சரியாக படித்து பாருங்கள்...சில ஆப்ஸ்கள் உங்கள் தகவல்களை கன்சல்டன்ஸி நிறுவனங்களுக்கு விற்றுவிடும். மற்றும் உங்கள் பர்சனல் தகவல்களான மொபைல் நம்பர், இமெயில் ஐடி, கிரெடிட் கார்டு நம்பர் போன்ற தகவல்கள் இது போன்ற ஆப்ஸ்களால் பகிரப்பட வாய்ப்பு உள்ளது.

நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளத்திலோ அல்லது ஆப்ஸோ அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் ஒருமுறையாவது படித்துப் பாருங்கள். ஒருவேளை உங்கள் தகவல் திருடப்பட்டது என நீங்கள் வழக்கு தொடர்ந்தால் அதற்கு அவர்கள் நீங்கள் ஒத்துக்கொண்ட விதிமுறைகளை காரண்ம் காட்டி விடுவார்கள்.

எப்படி தவிர்க்கலாம்?:

1. நீங்கள் பொருள் வாங்கும் இணையதளத்தில் இருக்கும் நிபந்தனைகள் விதிமுறைகளை படித்துவிட்டு அது திருப்திகரமானதாக இல்லையெனில் அந்த தளத்தில் ஆர்டர் செய்யாதீர்கள்.

2.அவசியம் என்றால் மட்டும் ப்ரௌசிங் சென்டருக்கு சென்று ஆர்டர் செய்யுங்கள். அப்படி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றி விடுங்கள்.

3. உங்கள் ப்ரௌசரில் கடையாக பயன்படுத்திய இணைய தளங்களின் பட்டியல், அதன் ஹிஸ்டரி பதிவில் இருக்கும். அதை டெலிட் செய்தால் உங்கள் பாஸ்வேர்ட், கிரெடிட் கார்டு நம்பர் ஆகியவை அழிக்கப்பட்டுவிடும்.