www.rupeedesk.in

போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்

Question :

ஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்

Answer :


போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்


க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.

போனஸ் பங்குகள் என்பது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் தங்கள்லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். இவை 1:1, 1:2 போன்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு ப்பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக்காரராகி விடுகிறார்.

மேலும் ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் போது அந்நிறுவனத்தின் பங்குவிலை குறைகிறது. உதாரணமாக ஒரு  நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்வோம். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குவிலை ரூ.2000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அதன் விலை தானாகவே ரூ.1000 ஆகிவிடும்.

இதுபோன்ற சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்ரெக்கார்ட் தேதி என்பதைத்தான்! அதாவது நிறுவனங்கள் இதுபோன்றபோனஸ் பங்குகளையோ (Bonus Shares), டிவிடெண்டையோ (Dividend),பங்கு பிரிப்பையோ (Stock Split) அறிவிக்கும்போது ரெக்கார்ட் தேதி ஒன்றைஅறிவிப்பார்கள்.  அந்த குறிப்பிட்ட தேதியில் யாரிடம் பங்கு இருக்கிறதோஅவருக்குத்தான் அந்தச் சலுகை கிடைக்கும்.

உதாரணமாக. ஒரு நிறுவனம் ஜூன் 22ம் தேதியை ரெக்கார்ட் தேதியாகஅறிவித்திருந்தால். அன்றைய தினம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குஇருக்க வேண்டும், குறைந்தபட்சம் அதற்கு இரண்டு தினங்களுக்குமுன்பாக நாம் அந்தப் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால்,ஒரு பங்கை வாங்கினால் அது நம் டீமேட் கணக்குக்கு வர 2 நாட்கள்தேவைப்படும்.

அப்படிப் பார்த்தால் ஜூன் 20 ஆம் தேதியன்று வாங்கியவர்களுக்குத்தான்இந்தச் சலுகை கிடைக்கும். அதற்குப் பிறகு இந்தப் பங்கை வாங்கினால்அந்த பங்கு நமக்குக் கிடைக்குமே தவிர போனஸ் பங்குகள் கிடைக்காது. ரெக்கார்ட் தேதிக்கு முந்தய நாள் ஜூன் 21 Ex-Bonus தேதி என்று அழைக்கப்படும். Ex-Bonus தேதி குறிப்பிட்ட அந்த நாளில் அதன் பங்கின் விலை அந்த நிறுவனம் அறிவித்திருந்த விகிதத்தின் படி குறைந்து வர்த்தகமாகும்.
--