www.rupeedesk.in

எஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி

எஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி?
how to start investment Systematic Investment Plan(SIP) through online




Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
Share Market Training



எஸ்ஐபி என்பது முறைப்படுத்தப்பட்ட நிலையான முதலீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதும் ஒன்று. மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் குறைந்தது 5000 ரூபாய் முதலீசு செய்ய வேண்டும் என்பதால் முதலீடுகள் குறைவாகவே இருந்தது. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகக் குறைந்தது 500 ரூபாய் முதல் மாத மாதம் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக எஸ்ஐபி திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. எனவே இந்த எஸ்ஐபி திட்டங்களில் எப்படிக் கணக்கை துவங்குவது மற்றும் முதலீடு செய்வது என்பது பற்றி விளக்கமாக இங்குப் பார்ப்போம்.

உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் ஒரு புகைப்படத்தைச் சமர்ப்பியுங்கள். மேலும், நீங்கள் உயிருடன் இருப்பதை நேரடி பரிசோதனை அல்லது (ஐபிவி) ஈ கேஒய்சி எனப்படும் மின்னணு முறை வழியாக நிதி இல்லத்திற்கு உறுதி செய்யுங்கள்.

இ-கேஒய்சி க்கான நிதி இல்லங்கள் அல்லது பதிவாளர்கள் ஒருவேளை உங்கள் நிதி நிறுவனம் ஈ கேஒய்சி வசதிக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், காம்ஸ் கேஆர்ஏ அல்லது கார்வி இணையத்தளத்திற்குள் உள்நுழைந்து உங்கள் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை கணக்கை உருவாக்குங்கள் ஒருமுறை உங்கள் கேஒய்சி இணக்கமான பிறகு, பரஸ்பர நிதி நிறுவனத்தின் இணையத் தளத்திற்கு வருகை தாருங்கள். ஒரு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கணக்கை உருவாக்க புதிய கணக்குகளுக்கான பதிவு இணைப்பைத் தேடுங்கள்

திட்டத்தின் பெயர், சிப் மற்றும் தேதியை சரிபாருங்கள் உங்கள் கணக்கிற்குள் உள்நுழைந்து, பரஸ்பர நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள், பிறகு ஒரு சிப் தேதியை தேர்வு செய்து உங்கள் வேண்டுகோளைச் சமர்ப்பியுங்கள்.

வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் சிப் திட்டத்தைத் தற்போது தொடங்கிவிட்டீர்கள். இப்போது, சந்தை நிலைமைகளைப் பற்றிக் கவலைப்படாமல், நீண்டகாலத்திற்கான செல்வத்தை உருவாக்கத் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

Share Market Training



* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில் 
   இருந்து பணம் சம்பாதியுங்கள்

* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா?

* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா?

* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,     
   வருமானம் ஈட்டுங்கள்.

* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்

* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச   
   ஆலோசனைகளை வழங்குகிறோம்

* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!

* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி?

*********************************************************************************

இலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்
பங்கு சந்தை பயிற்சி வகுப்புகள்  - சென்னை
இலவச முதலீட்டு ஆலோசனைகள்


ருபீடெஸ்க் கன்சல்டன்சி


*********************************************************************************
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்

1.  பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

2.  உபரி பணத்தில் மட்டுமே முதலீடு செய்யவும்

3. பகுதி பகுதியாக முதலீடு செயவும்

4. ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்யவும்

5. வாங்குதல் /விற்றல் எதுவாக இருந்தாலும் முடிவு          
    நம்முடையதாகஇருக்கவேண்டும்

6. லாபமோ / நட்டமோ அதற்கு இலக்கு வைக்கவேண்டும்

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்
How should you select your first mutual fund scheme




வாழ்க்கையில் நமக்கு இருக்கும் பல்வேறு முதலீட்டு தேர்வுகளில் பரஸ்பர நிதி திட்டம் எனப்படும் மியூச்சுவல் ஃபண்ட்திட்டமும் ஒன்று. இன்றைய நிலையில் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய தயங்குவோர் அல்லது பயப்படுவோருக்கு மியூச்சுவல் ஃபண்ட்திட்டம் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
இத்திட்ட முதலீட்டில் பல்வேறு பாதிப்புகள் உள்ளது, இதில் லாபத்தை அடைந்துவிட்டால் உங்களுக்கு நம்பிக்கையை உருவாக்கும் இல்லையெனில் நம்பிக்கையை முழுமையாக உடையும். ஆகவே முதலீடு செய்வதற்கு இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.


கை நிறைய லாபம்
நீங்கள் தேர்வு செய்யும் பரஸ்பர நிதித் திட்டம் கைநிறைய லாபங்களைத் தரவேண்டும் என்றால், பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
பரஸ்பர நிதி முதலீட்டிற்கு தொடக்கக் கால முதலீட்டாளர்களுக்கு ஒரு வழிகாட்டியை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.



முதலீட்டை பிரித்தல்
தொடக்க கால முதலீட்டாளர்கள் உங்கள் முதன்மையான முதலீடுகளை வங்கி வைப்பு நிதிகளிலும் மற்றும் இதர நிலையான வருவாய் திட்டங்களிலும் போட்டுவிட்டு மீதமிருக்கும் தொகையை ஒரு பங்குச் சந்தை நிதி திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்ததாகும்.

நீண்ட கால திட்டம் உயர்ந்த வருவாயைப் பெறுவதற்கு ஆரம்ப வருடங்களில் நீங்கள் முதலீடு செய்ய தொடங்கியிருக்கும் போது உயர்ந்த வருவாயைப் பெற நீண்ட கால திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள். நீண்ட கால முதலீட்டுத் தேர்வுகளில் பங்கு சந்தை சிறந்தது அதிலும் பரஸ்பர நிதிகளின் வழியாக முதலீடு செய்வது தொந்தரவில்லாத மற்றும் பாதுகாப்பான பந்தயமாகும்.


வரி விதிப்பு வரிவிதிப்பு தொடர்பான இதர நன்மைகளைப் பெறுவது தொடர்பாக நீங்கள் முதலில் உயர்ந்த வருவாயைத் தரும் நீண்ட கால சமச்சீர் நிதிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நிதி ஒதுக்கீடு நிதி ஒதுக்கீட்டு பண்பு காரணமாக முதலீட்டாளர் தற்போதைய பங்கு மற்றும் கடன் விகிதங்களை பராமரிக்க 65:35 க்கு நெருக்கமான அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும். தேவையான அளவை மட்டக்குறி, பங்கு சார்ந்த திட்டமாக இருந்து, வரிச் சலுகைகளைப் பெரும் திட்டமாகவும் இருக்க வேண்டும்.

சிறந்த முதலீட்டு தேர்வு எனவே, கடன் உட்கூறுகளுக்கு வரிச் சலுகைகள் மற்றும் 15% உயர் வருவாய் சமச்சீர் நிதிகளிலிருந்து கடந்த ஒரு வருடமாக ஈட்டப்பட்டுள்ளது. இது, முதல்முறையாக முதலீடு செய்யும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், அவர்களுடைய மதிப்பீட்டில் பெரிய விலைச் சரிவை சந்திக்க விரும்பாதவர்களுக்கு நல்ல தேர்வாகும். ஆனால், நிச்சயமாக இது அபாயமற்றதும் அல்ல. மேலும் ஒரு புதிய முதலீட்டாளராக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள குறைந்தளவு மாறும் தன்மைக் கொண்ட சில சமச்சீர் நிதி திட்டங்களில் (balanced fund schemes) முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளலாம்.

குறைந்த ஆபத்து சமச்சீர் நிதி திட்டங்களில் வளர்ச்சியுடன் உங்கள் முதலீட்டிற்கு பாதுகாப்பையும் நீங்கள் எதிர்ப்பார்க்கலாம். மேலும். சந்தையில் சரிவுகள் ஏற்படும் போது குறைவான வீழ்ச்சிக்கு உட்படும் பங்குச் சந்தை நிதி திட்டமாக இது அதிக பாதுகாப்பை வழங்குகிறது. எனவே தொடக்க கால முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாக நிரூபணமாகியுள்ளது.

ஈஎல்எஸ்எஸ் அல்லது வரி சேமிப்பு பரஸ்பர நிதி திட்டம் சமச்சீர் நிதிகளில் வழங்கப்படுவதைப் போல ஈஎல்எஸ்எஸ் திட்டத்திலும் வரி சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இந்த வரி விலக்கு யு/எஸ்80சி பிரிவின் கீழ் அளிக்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டின் யூனியன் பட்ஜெட்டின்படி ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் முதலீடு செய்யலாம். மேலும் இந்தப் பிரிவின் கீழ் வரிவிலக்கிற்கு தாக்கல் செய்யலாம்.



3 வருடம் ஒரு முதலீட்டாளர் இந்த திட்டங்களின் நீண்ட காலவரையறை வரை இருக்கலாம். உதாரணமாக, குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் என்று வைத்துக் கொண்டால் அதுவே இந்த நிதி திட்டத்திற்கான பூட்டுக்காலமாகும். எனவே வரிவிலக்குடன் இந்த நிதி திட்டத்திலிருந்து நீங்கள் நியாயமான வருவாயை அறுவடை செய்யலாம்.

மெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன ? What is the metropolitan stock exchange or MSEI ?

மெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் -  MSEI ) என்றால் என்ன ?
What is the metropolitan stock exchange or MSEI ?




நாம் அறிந்த இதர பரிமாற்றகங்களைப் போலவே, இந்தியப் பெருநகர பங்குப் பரிமாற்றகக் கட்டுப்பாட்டுச் சந்தையும் (எம்எஸ்இஐ) செபி எனப்படும் காப்பாவணங்கள் மற்றும் பங்கு பரிமாற்றக இந்திய இயக்குநரகத்தால் (எஸ்இபிஐ) அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும் டிசம்பர் 21, 2012 அன்று அங்கீகரிக்கப்பட்ட பங்குப் பரிமாற்றகச் சந்தையாக கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


முக்கியப் பங்குதாரர்கள் சிறிய அளவிலான பணப் பரிமாற்றகங்களில் சுமார் 88% அதிகமானப் பங்குகளை மிக உயர்ந்த பொது மற்றும் தனியார்த்துறை வங்கிகள் இதர உள்நாட்டு நிதி நிறுவனங்களுடன் சேர்ந்து வைத்திருக்கின்றன



எம்எஸ்இஐ யின் சேவை வழங்கல்கள் பிற பங்குப் பரிமாற்றகங்களைப் போலவே, எம்எஸ்இஐ முதலீட்டுச் சந்தைகள், எஃப் அண்ட் ஓ பிரிவு, கடன் சந்தை மற்றும் நாணய வகையீடுகளில் வர்த்தகத்தை வழங்குகிறது. மேலும் இந்தப் பரிமாற்றகம் ஒரு சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை வியாபாரத்திற்கான தளத்தையும் வழங்குகின்றது. மேலும் இந்த நிறுவனம் ஐஆர்எஃப் அல்லது வருங்கால வட்டி விகிதத்தில் 10 ஆண்டுகளுக்கு இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புடன் வியாபாரத் தளத்தை வழங்குகின்றது. இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இந்த பிரத்யேகத் தயாரிப்பு மாறும் தன்மை கொண்ட வட்டி விகிதங்களுக்கு எதிராக ஒரு நல்ல காப்பு அரணை வழங்குகின்றது.



எம்எஸ்இஐ யில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கருதப்பட்ட கால வரையரையில் இது வரை பிராந்திய பரிவர்த்தனை நிறுவனங்களாகப் பட்டியலிட்ப்பட்டிருந்த சில நிறுவனங்கள் இப்போது எம்எஸ்இஐ க்கு நகர்ந்துள்ளன. இந்த நிறுவனம் தொகுதி ஒப்பந்தங்கள் மற்றும் பங்கு நிதி வணிகத்தை ஈர்ப்பதன் மூலம் பிரதானமாக பங்குச் சந்தை வியாபாரத்தை உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

நிதி சார்ந்த கல்வியறிவு நிதியியல் கல்வியறிவை வளர்ப்பதற்காக இந்தப் பரிமாற்றகம் ஒரு நாளுக்கு ஒரு கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாவது அன்றாட அடிப்படையில் நாடு முழுவதும் நடத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்நிறுவனம் என்ஐஎஸ்எம் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. மூலதனக் கல்வியறிவு பற்றிய என்ஐஎஸ்எம் தேர்வுகளை வழங்கத் தொடங்கியுள்ளது.

இந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை வாங்குவது எப்படி

இந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை வாங்குவது எப்படி-How to buy US Dollar in Indian Currency Futures Market.

Share Market Training : Whatapp Number : 9841986753
வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி? 

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீபத்தில் ரூ. 68 இருந்து ரூ. 64 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க டாலர்களை வாங்குவதற்கான சரியான நேரமாகும்.
வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு வரம்புகளுக்கு அப்பாற்பட்டு நீங்கள் மிகப் பெரிய அளவுகளில் டாலர் நோட்டுகளை வாங்க முடியாது, அப்படிச் செய்தால் அது தற்போதைய சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாகும்.

ப்யூச்சர் சந்தைகளில் டாலர்களை வாங்குவது எப்படி? கரன்சி தடையின்றி வர்த்தகம் செய்யப்படுகிறது, சர்வதேச பங்கு பரிவர்த்தகத்தின் கரன்சி பிரிவில் நீங்கள் அவற்றை வாங்கலாம். நீங்கள் 1 லாட் வாங்க வேண்டும். அது 1000 டாலர்களாகும். இருப்பினும், வரம்பு குறைவாக இருப்பதால், இறுதியில் நீங்கள் 1000 டாலருக்கு ரூ. 3,000 முதல் 4,000 வரை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். பங்குகளில் வர்த்தகம் செய்ய உங்களிடம் ஒரு கணக்கு இருந்தால், டாலர்களை வாங்கவும் விற்கவும் தரகர் உங்களை கரன்சி பிரிவில் சேர்ப்பார்.

இப்போது அமெரிக்க டாலர்களை ஏன் வாங்க வேண்டும்? இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக ரூ. 68 என்கிற நிலைகளிலிருந்து தற்போதைய ரூ. 64 என்கிற நிலை வரை முன்னணியில் அதிகளவில் லாபமடைந்துள்ளது. கரன்சி அமெரிக்க டாலருக்கு எதிராக எப்பொழுதும் வீழ்ச்சியடையும் ஒரு போக்கு இருப்பதால், வரவிருக்கும் நாட்களில் நாணயம் கணிசமான லாபங்களை அடையுமா என்பதில் சந்தேகங்கள் இருக்கிறது.

அமெரிக்கப் பொருளாதாரம் மேலும், அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில் ரூபாய் உட்பட கூடை நாணயங்களுக்கெதிராக டாலர் வலுப்பெறும் சாத்தியங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இப்போது நீங்கள் வாங்கி வைத்தால், பின்னர் நாணயங்களை விற்பதற்கு ஒரு நல்ல நேரம் கிடைக்கும்

ஒரு குறுகிய கால ஒப்பந்தத்தை எடுக்க முயற்சி செய்யவும். நீண்ட கால ஒப்பந்தத்தில் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒரு குறுகிய கால ஒப்பந்தத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

நீண்ட கால ஒப்பந்தம் நடுத்தர மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்களில் இயக்கத்தை கணிப்பது மிகவும் கடினமாகும். இந்த ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட கால கட்டத்திற்கானது, எனவே உங்கள் நிலைப்பாட்டை முடிவு செய்ய வேண்டும்.

பரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள்

பரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள்

பரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி விதிமுறைகள் 10 புள்ளிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

Income Tax Rules On Mutual Fund Gains



பரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி விதிமுறைகள் 10 புள்ளிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்திய பரஸ்பர நிதித் துறை நிர்வாகத்தின் கீழ் சொத்துக்கள், கடன் மற்றும் பங்குச் சந்தை என இரண்டு பிரிவுகளிலும் வலுவான முதலீடுகளினால் உந்தப்பட்டு இந்த ஜூலை மாதம் ரூ. 20 இலட்சம் கோடிகள் சாதனை உயரங்களைத் தொட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் சிப் நிதித் திட்டங்கள் வழியாக பரஸ்பர நிதிகளில் தொகையை முதலீடு செய்து சாதனையை உயர்த்தி வருகின்றனர். முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 5,000 கோடிகளை சிப் நிதித் திட்டங்களின் வழியாக முதலீடு செய்கிறார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட முறையான முதலீட்டுத் திட்டங்கள் அல்லது சிப் நிதித் திட்டங்கள் என்று பொதுவாக அறியப்படும் இது பரஸ்பர நிதிகளால் வழங்கப்படும் ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டங்களில் ஒருவர், ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தில் ஒரு நிலையானத் தொகையை வரையறுக்கப்பட்ட கால இடைவெளிகளில் முதலீடு செய்யலாம். பரஸ்பர நிதி ஆதாயங்களின் மீது நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு என்பதைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

1) வரி நோக்கங்களுக்காக, ஒரு பரஸ்பர நிதித் திட்டம் சமபங்கு நிதிகள் அல்லது பங்கு சார்ந்த நிதித் திட்டங்களில் 65 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட அதன் நிதிகளை முதலீடு செய்தால் அது பங்கு நிதிகளாகக் கருதப்படுகின்றது.

2) பங்குகளில் பரவலாக்கப்பட்ட நிதிகளைத் தவிர, தரகு செலவாணி நிதிகளும் பங்கு நிதிகளாகக் கருதப்படுகின்றன. தரகுச் செலவாணி நிதிகள் பங்குகளிலும் மற்றும பங்கீட்டு ஆதாயங்களிலும் முதலீடு செய்கின்றன, அதே சமயத்தில் பங்கு வருமான நிதிகள் பங்குக் கலவை, பங்கு ஆதாயங்கள் மற்றும் கடன் நிதிகளில் முதலீடு செய்கின்றன. ஒரு சமச்சீர் நிதி குறைந்தபட்சம் 65 சதவிகிதத்தை சம பங்குகளில் முதலீடு செய்தால், வரி நோக்கத்திற்காக அது ஒரு சமபங்கு நிதியாகக் கருதப்படும்.

 3) 12 மாதங்களுக்கு மேல் வைத்திருக்கும் சமபங்கு பரஸ்பர நிதி அலகுகளுக்கான எந்த ஒரு ஆதாயமும் சிப் (SIP)அல்லது ஒட்டு மொத்தத் தொகை) நீண்ட கால மூலதன ஆதாயமாகக் கருதப்படுகின்றது. சமபங்கு நிதிகளிலிருந்து கிடைக்கும் நீண்ட கால மூலதன லாபங்களுக்கு வரிகள் இல்லை.

 4) 12 மாதங்களுக்கும் குறைவான காலத்தைக் கொண்ட சமபங்கு நிதிகளிலிருந்து கிடைக்கும் ஆதாயங்களுக்கு 15 சதவிகிதம் குறுகிய கால மூலதன ஆதாய வரிகள் பொருந்தும்.

5) நிறைய முதலீட்டாளர்கள் சமபங்கு பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் அதே சமயத்தில் லாபப் பங்கு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். நீங்கள் எப்போது பெற்றுக் கொண்டிருந்தாலும், சமபங்கு நிதிகளிலிருந்து கிடைக்கும் பங்காதயங்களுக்கு வரிகள் இல்லை.

6) கடன் நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் நிதிகள் மூன்று வருடங்களுக்கு மேல் வைத்திருந்தால் மட்டுமே நீண்ட காலத் திட்டங்களாகக் கருதப்படும்.

7) தற்போது, கடன் நிதிகள் மீதான நீண்ட காலத்திற்கான மூலதன ஆதாயங்கள் 20 சதவிகித கட்டணத்தில் வரிவிதிக்கப்படுகின்றன. இருந்தாலும், முதலீட்டாளர்கள் அவர்களுடைய அசல் கடன் நிதித் திட்டத்தின் மீது பொருளாதார ஒழுங்குமுறை நற்பயன்களைப் பெறலாம். இதன் பொருள் என்னவென்றால், அசல் முதலீடு பணவீக்க விலைகளுக்கு ஏற்றவாறு சரிசெய்யப்பட்டு அதற்கேற்ப வரிவிதிக்கப்படும். எனவே பணவீக்கக் காரணத்திற்குப் பிறகு அசல் முதலீட்டு விலை மேலே உயருகிறது, நீண்ட கால மூலதன ஆதாய வரி புறக்கணிக்கத்தக்க நிலைகளுக்கு வரும்.

 8) ஆனால் கடன் பரஸ்பர நிதி முதலீடுகள் மூன்று வருடங்களுக்கு முன்பே திரும்பப் பெறப்பட்டாலோ அல்லது விற்கப்பட்டாலோ, உங்கள் வரிப் பலகங்களுக்கு ஏற்றபடி குறுகிய கால ஆதாய வரிகள் விதிக்கப்படும்.

9) கடன் நிதிகளிலிருந்து பெறப்படும் வருவாய் கூட பங்கு ஆதாய வடிவில் வருகிறது. கடன் பரஸ்பர நிதிகளால் அறிவிக்கப்படும் எந்தவொரு பங்காதாயமும் முதலீட்டாளரின் கைகளுக்கு வரும் போது வரிவிலக்கு பெறுகிறது.

 10) இருப்பினும், பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு பங்காதயங்களை ஒப்படைக்கும் முன், 28.84 சதவிகித விலையில் பங்காதாய விநியோக வரியை (மிகை வரி மற்றும் மேல் வரி உட்பட) செலுத்துகின்றன.

கடன் பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument

கடன் பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument


கடன் பத்திரம் (debt instrument) என்பது ஒரு காகிதம் அல்லது மின்னணு சட்டப்பூர்வ கடமையாகும். அது கடனைத் திருப்பிக் கொடுப்பவர் (அல்லது கடனை வழங்குபவர்), கடன் வழங்குபவர் (அல்லது கடன் கொடுப்பவர்) க்கு கடன் வாங்கிய தொகையை வட்டியுடன் சேர்த்து திருப்பியளிக்க உத்திரவாதம் அளிப்பதன் மூலம் நேரடியாக நிதியைத் திரட்ட வழிவகுக்கிறது. கடன் கொடுப்பவர் (அல்லது வழங்குபவர்) அசல் மட்டுமல்லாமல் வட்டியுடன் சேர்த்து ஈட்டுவதற்கு அனுமதிக்கிறது. கடன் பத்திரங்களின் வகைகள் கடனீட்டுப் பத்திரங்கள், குத்தகைகள், சான்றிதழ்கள், பரிமாற்ற ரசீதுகள், உறுதிமொழிக் குறிப்புகள் முதலியன ஆகும்

மாற்றம் இந்தக் கருவிகள் சந்தைப் பங்கேற்பாளர்களுக்குக் கடன் உடைமைக்கான உரிமையை ஒரு தரப்பிலிருந்து மற்றொரு தரப்பிற்கு எளிதாக மாற்றுவதற்குத் தேர்வுகளை வழங்குகிறது. கருவியின் வாழ்நாள் காலத்தில் கடன் கொடுப்பவர் அசலுடன் ஒரு நிலையான வட்டித் தொகையைப் பெறுகிறார். இது வழங்குபவர் மற்றும் பெறுபவருக்கு இடையேயான ஒரு வகை ஐஓயூ (நான் உங்களுக்குக் கடன் பட்டுள்ளேன்) என்பதாகும்.

கடன் பத்திரம் முக்கியமானது ஏனென்றால் 1) இது கடன் திருப்பிச் செலுத்துதலை சட்டப்பூர்வமாக அமல்படுத்துகிறது. 2) இது கடன்பாட்டின் இடமாற்ற வசதியை அதிகரிக்கிறது. கால அளவைப் பொறுத்து, கடன் கருவிகள் நீண்ட காலக் கடன்பாடுகள் அல்லது குறுகிய காலக் கடன்பாடுகள் என்று வகைப்படுத்தப்படுகிறது.

குறுகிய காலக் கடன் பத்திரங்கள் குறுகிய காலக் கடன் பத்திரங்கள் அது தனிப்பட்டதாக இருந்தாலும், பலருடையது ஒன்றிணைந்ததாக இருந்தாலும் ஒரு வருடத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாகக் கிரெடிட் கார்ட் கட்டணங்கள், தினக்கூலிக் கடன்கள் அல்லது கருவூலக் குறிப்புகள். நீண்ட காலக் கடன் பத்திரங்கள் ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களில் திருப்பிச் செலுத்தப்படுகிறது. மேலும் குறிப்பிட்டக் கால இடைவெளிகளில் மாதாந்திர தவணைக் கட்டண வழியாகத் திருப்பிச் செலுத்தப்படுகிறது. உதாரணமாக, நீண்ட காலக் கடன்கள் அல்லது அடமானங்கள்.

கடன் கருவிகள் கடன்கள், பத்திரங்கள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்கள் போன்ற கடன் கருவிகள் தனி நபர்கள், வியாபாரிகள் மற்றும் அரசாங்கத்தால் முதலீட்டை உயர்த்த அல்லது முதலீட்டு வருமானத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இங்குச் சில பொதுவான கடன் கருவிகளைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது:

கருவூல மசோதா கருவூல மசோதாக்கள் என்பவை குறுகிய காலக் கடன்களுக்கான கடப்பாடுகள் ஆகும். இது ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு வழங்கப்படுகிறது. இதை முதிரவடைந்த பிறகே பெற முடியும். இவை ரசீதுகள் மற்றும் செலவுகளில் ஏற்படும் குறுகிய கால முரண்பாடுகளை எதிர்கொள்ள வழங்கப்படுகிறது. நீண்ட முதிர்வு காலத்தைக் கொண்ட பத்திரங்கள் தேதியிடப்பட்ட முனைமப் பத்திரங்கள் எனப்படுகின்றன. கடன் பத்திரங்களுக்குச் சொத்து ஆதரவு இல்லை. இவை பொதுவாக நிறுவனங்களால் சில குறிப்பிட்ட நிதித் திட்டங்களுக்காக நடுத்தர அல்லது குறுகிய கால மூலதனத்திற்கு வழங்கப்படுகின்றன. கடன் அளித்தவர்களின் பணம் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வருவாயுடன் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடமானம் அடமானம் என்பது ஒரு குடியிருப்புச் சொத்துக்கு எதிராகத் தரப்படும் கடனாகும். மேலும் இதனுடன் தொடர்புடைய சொத்தினால் பாதுகாக்கப்படுகிறது. ஒரு வேளை பணம் திருப்பிச் செலுத்துவதில் தவறுதல் ஏற்பட்டால் கடன் தொகையைத் திரும்பப் பெறுவதற்குச் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்படும்.

பத்திரங்கள் பத்திரங்கள் பொதுவாக அரசாங்கம், மைய வங்கி அல்லது வியாபார நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. மேலும் கடன் வழங்கும் நிறுவனத்தின் சொத்துக்களால் ஆதரிக்கப்படுகின்றன. ஒரு நிறுவனத்தால் கடன் மூலதனத்தை உயர்த்துவற்கு பத்திரங்கள் வழங்கப்பட்டு அதன் தொடர்ச்சியாகத் திவால் நிலை அறிவிக்கப்பட்டால், பத்திரதாரர்கள் நிறுவனத்தின் சொத்துக்களிலிருந்து தங்கள் முதலீட்டைத் திரும்பப் பெறும் உரிமையைக் கொண்டுள்ளனர்.

குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training

குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்

1.  பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

2.  உபரி பணத்தில் மட்டுமே முதலீடு செய்யவும்

3. பகுதி பகுதியாக முதலீடு செயவும்

4. ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்யவும்

5. வாங்குதல் /விற்றல் எதுவாக இருந்தாலும் முடிவு          
    நம்முடையதாகஇருக்கவேண்டும்

6. லாபமோ / நட்டமோ அதற்கு இலக்கு வைக்கவேண்டும்


* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா?

* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா?

* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,     
   வருமானம் ஈட்டுங்கள்.

* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்

* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச   
   ஆலோசனைகளை வழங்குகிறோம்

* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!

* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி?

*********************************************************************************

இலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்
பங்கு சந்தை பயிற்சி வகுப்புகள்  - சென்னை
இலவச முதலீட்டு ஆலோசனைகள்


ருபீடெஸ்க் கன்சல்டன்சி


ஷெல் நிறுவனம்( Shell Companies)என்றால் என்ன ?

ஷெல் நிறுவனம்( Shell Companies)என்றால் என்ன ?




ஷெல் நிறுவனங்கள் பொதுமக்கள் அல்லது சட்ட அமலாக்கத் துறையிடம் இருந்து வணிக விவரங்களை மறைக்கப் பல பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பொதுக் கருத்தாக, ஷெல் நிறுவனம் ஒரு சட்டவிரோத நிறுவனமாகக் கருதப்படுகிறது.
ஷெல் நிறுவனங்கள் என்றால் போலி நிறுவனங்கள் என்று கூறலாம். ஆனால் வரித் தவிர்ப்பு, வரி ஏய்ப்பு, பணமோசடி, பயங்கரவாத நிதி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட ஒரு சட்டப்பூர்வமான கட்டமைப்பைக் ஷெல் நிறுவனங்கள் கொண்டுள்ளன.
அத்தகைய நிறுவனங்களுக்குச் சொந்தமான குறிப்பிடத்தக்க சொத்துக்கள் இல்லை மற்றும் எந்த வணிக நடவடிக்கைகளும் முன்னெடுப்பதில்லை.

ஒரு ஷெல் நிறுவனம் துவங்க சட்டப்பூர்வமான காரணங்கள்
ஒரு ஸ்டார்ட் அப்பிற்கான ஷெல் நிறுவனம்: :ஒரு சட்டப்பூர்வமான காரணியாக, ஷெல் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, அவை நிதி திரட்ட உதவுவதால் ஆதரவு தருகின்றன.

எப்படி ஷெல் நிறுவனங்கள் செயல்படுகின்றன? கருப்புப் பணம் அல்லது கணக்கில்லாத பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவது ஒரு இடைத்தரகராகச் செயல்படுகிறது.. 1 கோடி கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றச் சம்மந்தப்பட்ட நபரிடமிருந்து 1 லட்சம் பெற்றுக்கொள்கிறது இந்தத் தொகை பின்னர் ரூபாய் 1௦ மதிப்புள்ள 10,000 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு ஷெல் நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு விற்கப்படுகிறது. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் மதிப்பை 100 மடங்கு அதிகரித்து மதிப்பை ரூ. 1 கோடியாக உயர்த்துகிறது. . பல சட்டவிரோத நிறுவனங்களின் மூலம், இந்தப் பணம் பின்னர் வெள்ளை பணமாக அசல் உரிமையாளருக்கு மாற்றப்படுகிறது.

அரசாங்கமும் பிற நிறுவனங்களும் எப்படி ஷெல் நிறுவனங்களை அடையாளம் காணுகின்றன ? உயர் பங்குப் பிரீமியங்கள், மிகப்பெரிய அளவு கையில் பணம், பட்டியலிடப்படாத கம்பனிகளில் முதலீடு, பெயரளவு ஊதிய மூலதனம், பூஜ்ஜியம் டிவிடெண்ட், பெரும்பான்மையான பங்குதாரர்கள் தனியார் நிறுவனங்கள், குறைந்த நிலையான சொத்துகள், பெயரளவு செலவுகள் மற்றும் குறைந்த இயக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக மிகப்பெரிய இருப்புக்கள் மற்றும் உபரி போன்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காண்கின்றன.

கொல்கத்தா: ஷெல் கம்பனிகளுக்கான ஹாட் இலக்கு இந்தியாவில் ஷெல் நிறுவனங்களில் 90 சதவீதத்திற்கும் மேலாகப் பணிபுரியும் தொழில் நுட்ப நிபுணர்களுடன் கொல்கத்தாவில் உள்ளது.

ஷெல் நிறுவனங்களின் மீதான அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கை பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தம் சட்டத்தின், 2016, ஒரு பகுதியாக, அரசாங்கம் பணத்தை மோசடி செய்யப் பயன்படுத்தப்படும் ஷெல் நிறுவனங்கள் மீது கடுமையான அடக்குமுறை என்று உயர் மதிப்பு நாணய அகற்றியதாக அறிவித்தது. பினாமி தடை விதிமுறை சட்டம் வரி விலக்கு அல்லது பினாமி சொத்துக்களை அரசு எடுத்துக்கொள்ள உதவுகிறது. வரி ஏய்ப்பு நடைமுறைகளைத் தடுக்கவும் மற்றும் வரி ஏய்ப்பு விளைவாக ஏற்பட்ட நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தவும், அத்தகைய நிறுவனங்கள் பெருகிய முறையில் அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் வருகின்றன.